-
யாழ்ப்பாணத்தில் புது பணக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு…
-
யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி 30 கோடி மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்று முன் தினம் (13) கைது செய்தனர். கைது செய்து விசாரணைகளின்…
-
யாழ்ப்பாணம் அரியாலையில் பொலிஸார் அடாவடி

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் நேற்று புதன்கிழமை (08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (09) நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனத்தில் குறித்த இடத்திற்கு கழிவுகளை கொண்டு வந்த…
-
வடமராட்சியில் மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பொலிஸாரினால் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை என பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைவிரித்துள்ளார். வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந. திரிலிங்கநாதன் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது வடமராட்சியில்…
-
நாய் மீது ஈவிரக்க்மின்றி கொதிநீர் ஊற்றிய நபர்

ஒரு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீர் ஊற்றி விரட்டும் சம்பவம், பொகவந்தலாவை நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு கேமராவில் திங்கட்கிழமை (15) பதிவாகியுள்ளது. பொகவந்தலாவை நகரில் சுற்றித் திரிந்த அந்த நாய் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது, கடைக்கு அருகில் பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளர் அந்த நாய் மீது வெந்நீர் ஊற்றியுள்ளார். சூடான நீரில் நனைந்த நாய், வலியால் அலறிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து ஓடிவிட்டதாக அருகிலுள்ள மக்கள்…
-
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் உயிரை மாய்த்த இளைஞன்

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச்…
-
ஜனாதிபதி வருகை; யாழில் மக்களை தூஷணத்தால் திட்டி விரட்டிய பொலிஸார்

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வருகைதந்தார். இதன்போது அப்பகுதியில் கூடியிருந்த, காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர். வயோதிபர்கள் எனவும் பாராது தூஷண வார்த்தைகளால் ஏசி பொலிஸார், முதுகில் பிடித்து தள்ளினர். பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்…
-
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளிலும் மற்றும் திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் இன்று (01) பங்கேற்கிறார். யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (01) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இதன் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும், கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் ஆகிய அடிப்படை மற்றும்…
-
யாழில் காவாலிகளை கௌரவிக்கும் சம்பிரதாயம்

யாழில் ஆவா குழுவுக்கும் அப்பன் குழுவான டில்லு எனும் காவாலிக் குழுவின் தலைவன் டில்லு, வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளரும் தற்போதைய நிழல் மாகாண கல்வி பணிப்பாளருமான கந்தையா பிரட்லி அவர்களால் விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். பல வாள்வெட்டு சம்பவங்களுடனும் தற்போது போதைப்பொருள் கடத்தல்களுடனும் தொடர்புபட்ட டில்லு என்ற காவாலி கடந்த வருடம் தனது 100 சகாக்களுடன் யாழ் இலங்கை போக்குவரத்து சாலையில் (சி.ரி.பி பஸ் ஸாராண்ட்) பிறந்தநாள்…
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிவப்புச் சால்வை அட்டகாசம்; பக்தர்கள் விசனம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்த மண்டபத்திற்கு போகும்போது வசந்த மண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்ந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதிடம் இடம்பெற்றுள்ளது. இதனால் வசந்த மண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய நபரை பாதிக்கப்பட்ட பெண்களும் அங்கிருந்த பலரும் கடிந்தார்கள். புதிதாக சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித் திரிபவர்கள் சிலர் அராஜகமான…