-
அடுத்தடுத்து கைது ; ஓட்டமெடுக்கும் பிள்ளையான் கும்பல்

பிள்ளையான் சாகாவான இனியபாரதியின் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, மற்றுமொரு நபரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த 12 அம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன்…
-
சிறையில் உள்ள பிள்ளையானுக்கு 50…. பொங்கலாம் ….குருதிக்கொடையாம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தனின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஐம்பது பானைகளில் பொங்கல் நிகழ்வு மற்றும் இரத்ததான நிகழ்வும் இன்று 19/08 இடம்பெற்றது. வாகரை பிரதேச தமிழ் மக்கள், விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பனிச்சங்கேணி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக பூசையினை தொடர்ந்து ஆலய முன்றலில் 50…
-
பிள்ளையானின் மற்றுமொரு சகா கைது

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்ததாகக் கூறப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து சிஐடி யினர் கைது செய்துள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிள்ளையானை கொழும்பு – குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி சிஐடியினர் கைது…
-
இனிய பாரதியின் சகா அதிரடியாக கைது

இனிய பாரதியின் சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் நேற்று (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்ட…
-
கருணாஅணி இனிய பாரதி கைது; காட்டிக்கொடுத்த பிள்ளையான்

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனிய பாரதி என அழைக்கப்படும் கே. புஷ்ப குமார் எனும் கைது செய்யப்பட்டுள்ளர். குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர். குறித்த கைது தொடர்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது முகப்புத்தகத்தில்…
-
பிள்ளையான் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஆயுதங்கள் மீட்பு

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை (30) முற்றுகையிட்டு இரவு 11 மணி வரை தேடுதலை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அவர் கொழும்பில்…
-
பிள்ளையானின் பரிசீலனைக்கு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் அடிப்படை உரிமைகள் மனுவைப் பரிசீலனைக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிள்ளையான் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஏப்ரல் 12…
-
கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் நடத்திய பல கொலைகள் அம்பலம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் விசாரணைகளில், கிழக்கு மாகாணத்தில் நடந்த அரசியல் ரீதியான கொலைகள் உட்பட பல குற்றச் செயல்கள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சமூகத்தில் பேசப்படாத பல மர்மமான குற்றச் செயல்கள் குறித்த தகவல்களும் வெளிவந்து கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன. பிள்ளையான் தனது அரசியல் நோக்கங்களுக்காக மட்டக்களப்பில் பல பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றது…
-
நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் விசுவாசி அஜித்

நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் என கூறப்படுகின்றது. அதோடு இவர் பிள்ளையானின் நெருங்கிய விசுவாசமாக செயல்பட்ட இவர் வாழைச்சேனை மக்களுக்கும் நன்கு அறிந்த ஒருவர் என்றும், இன்னும் பலர் இருக்கின்றார்கள் என்றும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தீவுச்சேனை பகுதியில் அமைந்திருந்த பிள்ளையான் குழுவின் முகாம்களில் கடந்த காலத்தில் பல பொது மக்கள் படு கொலை…
-
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கிய இருவர் மடக்கிப்பிடிப்பு

சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் பல குற்றச் செயல்கள், கொலைகள், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர் எனக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் உள்ளார். இந்நிலையில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிடைத்த தகவல்களின் படி, அரச சாட்சியாக மாறியுள்ள குகன் என்பவர், பிள்ளையானிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வழங்கியுள்ளார். அதன்படி, இன்று பிள்ளையான் அலுவலகத்தில் நடைபெற்ற…