Tag: Pkistan

  • இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் ; பாகிஸ்தான் பிரதமர்

    இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் ; பாகிஸ்தான் பிரதமர்

    பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா நேற்றிரவு வான்வழித் தாக்குதலை நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் தமது எல்லைப் பகுதியில் நடத்திய குண்டுத்…

  • பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் அடித்துக் கொலை

    பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் அடித்துக் கொலை

    கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது. இந்தியாவின் கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது. பத்து அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த இளைஞன், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரிடம்…

  • இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்கள்

    இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்கள்

    இலங்கை பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை (corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுப்பெற்ற எட்மிரல் வீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்.