Tag: Point Pedro

  • பருத்தித்துறையில் வீதிக்கு இறங்கிய வியாபாரிகள்

    பருத்தித்துறையில் வீதிக்கு இறங்கிய வியாபாரிகள்

    யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பருத்தித்துறை நகரிலிருந்து அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த பேரணி இடம்பெறுகிறது. இதில் 200 வரையான வர்த்தகர்கள் இணைந்திருக்கின்றார்கள். பருத்தித்துறை நவீன சந்தை பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி நகரசபை வரை சென்றடையவுள்ளது.  

  • பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணின் சடலத்தால் பரபரப்பு

    பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணின் சடலத்தால் பரபரப்பு

    யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

  • யாழில் மீண்டும் எலிக்காய்ச்சலால் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

    யாழில் மீண்டும் எலிக்காய்ச்சலால் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

    யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்றையதினம் (25-12-2024) இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் தற்போது முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்கு வர வேண்டும். சிகிச்சை எடுக்க வேண்டும். இதன் மூலம் நோய் தீவிரமாகுவதையும் இறப்பையும் தடுக்கலாம், குறைக்கலாம்.” என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  • யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் ; தாக்கியது யார்?

    யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் ; தாக்கியது யார்?

    யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கட்டைக்காடு பகுதியில் உள்ள மதுபானசாலையை அண்மித்த மதகு பகுதியில் இளைஞர் ஒருவர் அடி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டே வீசப்பட்டிக்கலாம் என பிரதேச மக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிசார் தாக்குதலுக்குள்ளான இளைஞனை மீட்டு மருதங்கேணி…