-
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை; சகோதரகள் கைது

கொழும்பு புறநகரான் அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 13 ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு…
-
யாழ் அல்லப்பிட்டி இளைஞன் மரணம்; வீதியில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது. அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம்…
-
யாழில் இளைஞனின் தலையை துளைத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற இளைஞன்…
-
யாழில் அதிகாலையில் பயங்கரம்; பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி வழியாக இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.எனினும், கட்டளையை மீறி குறித்த வாகனம் மண்டைத்தீவு நோக்கி பயணித்துள்ளது. இதன்போது, மண்டைத்தீவு பகுதியில் கடமையில்…
-
17 வயது பாடசாலை மாணவி கோடாரியால் தாக்கப்பட்டு கொலை

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய என். பாத்திமா நஷீமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கடந்த 17ஆம் திகதி பிரத்தியேக வகுப்பொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடாரியால் அவரது தலையில் தாக்கி பாரிய…
-
மட்டக்களப்பில் போராட்டகாரகள் – பொலிஸார் முறுகல்!

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை , இன்று சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை , கோட்டமுனை பாலத்தில் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் நிலையடுத்து அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இந்நாள், முன்னாள்…
-
யாழ் நீதிமன்றத்தில் பொலிஸ் கன்னத்தில் செருப்பால் அடித்த பெண்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது குழந்தையை, அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நீதிமன்றக் கட்டளையினால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கி மோதுதலில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ்…
-
யாழ் . போதனா வைத்தியசாலையில் சிறுமியை கைது துண்டிப்பு; பொலிஸார் மீது நீதிம்ன்றம் கடும் அதிருப்தி

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொலிசரின் இத்தகைய செயற்பாடு தொடருமாயின் வழக்கினை குற்ற புலனாய்வு துறையினருக்கு பரப்படுத்த நேரும் எனவும் பொலிஸாருக்கு மன்று அறிவுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி (கணூலா…
-
யாழ்ப்பாணத்தில் நகைகடையில் வேலை பார்த்த யுவதி ; களவெடுத்து சேர்த்த 2 கிலோ தங்கம்

யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த ஒன்றரை வருடகாலமாக பணியாற்றிய பெண், தான் கடையில் பணியாற்றி கால பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த ஒன்றரை வருட காலமாக நகைகளுக்கு பொறுப்பான பதவியில் பணியாற்றி வந்த நிலையில் தனக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக கூறி கடந்த 3 மாத…
-
சட்டவிரோத மதுபானம் அருந்தி 6 பேர் பலி; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

புத்தளம் – மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 6 பேர் உயிரிழந்து 8 பேர் சுகயீனமுற்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை இரண்டு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய வென்னுப்புவை பொலிஸாருக்கு அனுமதி அளித்து மாரவில நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (8) உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் மாரவில தம்பரவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரண்டு பெண்கள் கடந்த 7…