Tag: Police

  • யாழில் நித்திரைக்கு சென்ற இளம் தாய் சடலமாக மீட்பு!

    யாழில் நித்திரைக்கு சென்ற இளம் தாய் சடலமாக  மீட்பு!

    யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இவர் புதன்கிழமை இரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றார். பின்னர் வியாழக்கிழமை காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது…

  • யாழ்ப்பாணம் வந்து பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது

    யாழ்ப்பாணம் வந்து பொய் கூறி  யாசகம் பெற்ற தந்தை  கைது

    காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேணும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு கோரி ஒருவர் யாசகம் பெற்றுள்ளார். யாழில் நிலவும் கடுமையான வெப்பமான காலநிலையில் , வெயிலுக்குள் சிறுமியை சக்கர…

  • o/l பரீட்சைக்குச் சென்ற இரு மாணவிகள் மாயம் !

    o/l பரீட்சைக்குச் சென்ற இரு மாணவிகள் மாயம் !

    க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு மாணவிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவிகள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (14) சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இந் நிலையில் அவர்களில் ஒரு மாணவி தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன இரு மாணவிகளும் நெருங்கிய நண்பர்கள் எனவும் இவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்திற்கு அருகில் வைத்துப் பார்த்ததாகவும்…

  • முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில் ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

    முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில்  ஐவருக்கு நீதிமன்றம்  தடை உத்தரவு

    இறுதிக்கப்பட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தமிழின படுகொலை நாள் மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கும் ஏற்பாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்து சமூக சேவகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்முனை நீதிமன்ற நீதிபதியின் கையொப்பத்துடன் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவினால் இந்த தடையுத்தரவு பத்திரம் வழங்க…

  • யாழ் இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

    யாழ் இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

    யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர். குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு…