Tag: Poplice

  • யாழ் புன்னாலைக்கட்டுவனில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்

    யாழ் புன்னாலைக்கட்டுவனில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்

    யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயல்வீட்டுக்காரர்களுக்கு இடையே முரண்பாடு நிலவியுள்ளது. வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலடியில் நின்று பியர் அருந்திய போது, இரண்டு குடும்பஸ்தர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனது கணவரை தாக்கியதாக குறிப்பிட்டு, அயல்வீட்டு பெண் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அயல்வீட்டுக்காரரான 36 வயதானவர் காயமடைந்தார். அவரது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் காயமடைந்தார். அது ஆபத்தான காயமில்லையென பொலிசார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்கானவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

  • வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொல்லை செய்த திருக்கோவில் நபர்

    வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொல்லை செய்த திருக்கோவில் நபர்

    திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயது திருமணமானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண் ஒருவர், அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது ஒரு இளைஞர் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு…

  • பிள்ளையான் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஆயுதங்கள் மீட்பு

    பிள்ளையான் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஆயுதங்கள் மீட்பு

    பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை (30) முற்றுகையிட்டு இரவு 11 மணி வரை தேடுதலை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அவர் கொழும்பில்…

  • யாழில் பதின்ம வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 32 வயது நபர்

    யாழில் பதின்ம வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 32 வயது நபர்

    யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில் வைத்தியர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்…

  • யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து கொள்ளை

    யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து கொள்ளை

    யாழ். கைதடியில் ஆலயப் பூசகரைக் கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ – 9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத்…