Tag: Popular

  • திரிஷாவை சீண்டி வாயை சுட்டு கொன்ற நயினார் நாகேந்திரன்

    திரிஷாவை சீண்டி வாயை சுட்டு கொன்ற நயினார் நாகேந்திரன்

    பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன். முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்யை நயினார் விமர்சித்து பேசும்போது “அவர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், த்ரிஷாவை விட்டுவிட்டு வர வேண்டும்” என பேசினார். விஜய் – த்ரிஷா இருவரையும் இணைத்து அவர் பேசியது சர்ச்சையாக வெடித்த நிலையில் பிரபலங்கள் பலரும் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்தனர். த்ரிஷாவும் கடும் கோபமாக தனது வக்கீல் மூலமாக அறிக்கை வெளியிட்டு கண்டனம்…

  • பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்!

    பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்!

    இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12 ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு…

  • பெண் கைதியால் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை; பொலிஸார் ஷாக்

    பெண் கைதியால் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை; பொலிஸார் ஷாக்

    கல்கிசை, பிரிவேனா வீதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 பணம் மற்றும் 30 போலி எண் தகடுகளை கல்கிசை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு மின்னணு தராசு, இரண்டு தங்க நெக்லஸ்கள், ஒரு தங்க வளையல், ஒரு…

  • ஒரே ஒரு ‘செல்பி’; ரஷ்ய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய யானை

    ஒரே ஒரு ‘செல்பி’; ரஷ்ய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய யானை

    கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், அந்த யானைக்கு அருகில் சென்று நிழற்படம் எடுக்க முயன்றபோது யானை அவரைத் தாக்கியுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவருடன் சென்ற கணவர் காயமின்றி தப்பியுள்ளார்.…

  • கனடாவில் பயங்கரம்; பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

    கனடாவில் பயங்கரம்; பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்குள் நேற்று மதியம் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை…

  • விமான நிலையத்தில் யாழ் ஆவா குழு உறுப்பினர்கள் கைது ; திடுக்கிடும் தகவல்!

    விமான நிலையத்தில் யாழ் ஆவா குழு உறுப்பினர்கள் கைது ;   திடுக்கிடும் தகவல்!

    கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு ஆட்களை விநியோகிக்கும் பகிர் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தின் பின்னர் நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபர்கள், அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது,…

  • யாழ் மருதனார்மட சந்தைக்கு துப்பாகியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு

    யாழ் மருதனார்மட சந்தைக்கு துப்பாகியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு

    யாழ்ப்பாணம், மருதனார்மட சந்தைக்கு இன்று (10) காலை 06.03 மணிக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வருகை தந்த நபர் தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது. கையில் கொண்டு வந்த…

  • யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

    யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

    வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்துகுள்ளாகியுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.…

  • வடக்கு, கிழக்கு மக்கள் மீது நாமர் ராஜபக்க்ஷவின் திடீர் கரிசனை!

    வடக்கு, கிழக்கு மக்கள் மீது நாமர் ராஜபக்க்ஷவின் திடீர் கரிசனை!

    வடக்கு, கிழக்கு மக்களுக்காக, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிக்கின்றார். கம்பஹா – திஹாரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். மாகாண சபை தேர்தலை நடத்தி, வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க, அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச இதன்போது கூறியுள்ளார். இந்தநிலையில் நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா…

  • டெல்லியில் ஒன்பது பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

    டெல்லியில் ஒன்பது பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

    டெல்லி முழுவதும் உள்ள பல முக்கிய பாடசாலைகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் இன்று (09) அவசரகால நடவடிக்கைகளைத் தூண்டின. இது இந்தியாவின் முக்கிய நகரங்களில் கல்வி நிறுவனங்களை மீண்டும் மீண்டும் சீர்குலைத்துள்ள நடவடிக்கையின் அண்மைய சம்பவமாகும். திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் காலை 9:00 மணி வரை குறைந்தது ஒன்பது பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது. டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு அகற்றும் படையினரும் உடனடியாக குறித்த பாடசாலைகளுக்கு…