Tag: Popular

  • யாழ். மாநகர சபை உறுப்பினரின் மகன் போதை பொருளுடன் கைது

    யாழ். மாநகர சபை உறுப்பினரின் மகன் போதை பொருளுடன் கைது

    யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் ஐஸ் போதை பொருட்களுடன் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலையே இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரிடமிருந்தும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், வன்முறை கும்பலை சேர்ந்தவரின் உடமையில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை வன்முறை கும்பலை சேர்ந்த…

  • யாழில் அதிகாலையில் அதிரடிப்படையிடப்பட்ட முற்றுகையிடப்பட்ட வீடு!

    யாழில் அதிகாலையில் அதிரடிப்படையிடப்பட்ட முற்றுகையிடப்பட்ட வீடு!

    யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் குறித்த இளைஞனின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் குறித்த இளைஞன் இல்லாத நிலையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ள பொலிஸார் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட…

  • யாழில் அதிசயம், ஆனால் உண்மை… மழையுடன் விழுந்த மீன்கள்

    யாழில் அதிசயம், ஆனால் உண்மை… மழையுடன் விழுந்த மீன்கள்

    அண்மைய நாட்களாக யாழில் பெய்து வரும் மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகின்றது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளன. அந்த மீன்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் யாழில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

  • இசைப்பிரியா படுகொலை; ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்பு; பொன்சேகா தகவல்!

    இசைப்பிரியா படுகொலை; ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்பு; பொன்சேகா தகவல்!

    இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இறுதிப்போரின்போது 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரணடைந்தனர். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும் மக்களுடன் மக்களாகச் சரணடைந்தனர். அவர்களுக்குத் தேவையான உடை உணவு, மருந்து என்பவற்றை வழங்கி, புனர்வாழ்வில் இருந்து செல்லும் வரை அனைவரையும் முறைப்படி பாதுகாத்தோம். எனினும், இறுதிப்போரின் போது…

  • தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

    தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

    தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங் ஜே வான் (Myang Jae Wan) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக 8 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டேஜியானைச் சேர்ந்த மையாங் ஜே வான் (வயது 48) என்ற ஆசிரியை, கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் வைத்து 8 வயது சிறுமியைக்…

  • தங்காலையில் ஐஸ் போதை பொருளால் உயிரிழந்த நாய்கள்

    தங்காலையில் ஐஸ் போதை பொருளால் உயிரிழந்த நாய்கள்

    தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ‘ஐஸ்’ போதைப் பொருட்கள் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்தனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள நீரை பருகிய ஐந்து நாய்கள் ஒரே இடத்தில் சுற்றி சுற்றிச் வழமைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.இந்த நாய்களை கொண்டு செல்வதற்கு அரச மிருக…

  • கிளிநொச்சி மற்றும் யாழில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி

    கிளிநொச்சி  மற்றும்  யாழில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி

    நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தங்காலை பகுதியிலும் இஷாரா தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை, சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி வாடகை வாகனம் ஒன்றினூடாக கிளிநொச்சிக்கு சென்று…

  • குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள்

    குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள்

    இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்தது பகீர் கிளப்பி இருக்கிறது. அங்குள்ள குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அங்கு அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்து குழந்தைக்கு…

  • இலங்கை வரலாற்றில் 4 லட்சத்தை கடந்த தங்கம் விலை

    இலங்கை வரலாற்றில் 4 லட்சத்தை கடந்த தங்கம் விலை

    இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (17) 13 ஆயிரத்து…