-
பிள்ளைக்கு பொறுப்பேற்க மறுக்கும் இலங்கை கிரிகெட் வீரர்; மரபணு பரிசோதனைக்கு மறுப்பு

விமானப் பணிப்பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. மனுதாரரான செவ்வந்தி சேனாதீர என்பவர், சாமிக கருணாரத்னவுடன் தனக்கு இருந்த தொடர்பினால் தமக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை சாமிக்க கருணாரத்னவே தந்தை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை கோரியிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சாமிக கருணாரத்னவின்…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தை பிரசவித்த வௌிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவராவார். இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வதற்காக விமான நிலையத்தின் இடைமாறு பயணிகள் முனையத்தில் (Transit terminal) காத்திருந்துள்ளார். இதன்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக…
-
தாயின் காதலனால் கர்ப்பமான கல்முனை மாணவி

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் கனிஷ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையாரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாடசாலைக்கு இரண்டு மாதங்களாக செல்லாத குறித்த மாணவி தொடர்பாக பாடசாலை நிர்வாகம் அவரது தாயாரிடம் வினவியதாகவும் உரிய…
-
யாழ் போதனாவில் மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி (வயது 25) என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
-
இலங்கையில் முதன்முறை 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!

இலங்கையில் தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாயொருவர் 6 குழந்தைகளை பிரசவித்த அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள். பேராசிரியர் டிரான் டயஸின் பராமரிப்பில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன. இந்நிலையில் தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் நல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக…
-
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்

மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் 4 குழந்தைகளை சுமந்து வந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சையில் 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை பிறந்து நலமுடன் உள்ளனர்.
-
இந்தியாவில் குழந்தை பெற்றால் ரூபா 2 லட்சம்

இந்தியாவில் இந்துக்கள் 3 ஆவது குழந்தை பெற்றால் 1 லட்சமும் 4 ஆவது குழந்தை பெற்றால் ரூபா 2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார். ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரமோத் முத்தாலி இவ்வாறு தெரிவித்தார்.இக்கூட்டத்தில் பேசிய பிரமோத் முத்தாலிக், ஸ்ரீராம் சேனா அரசியல் செய்யாது. அனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும். தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது.…
-
தாயாகும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை

ரஷ்யாவின் சில பகுதிகளில், பாடசாலை மாணவியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைந்துவருகிறது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. ரஷ்யா — உக்ரைன் போரும், மக்கள்…
-
யாழில் பதின்ம வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 32 வயது நபர்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில் வைத்தியர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்…
-
யாழில் கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவால் சோகம்

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆறு மாத கர்ப்பிணியாக பெண் குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில், வீட்டாரால் காப்பற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.