-
யாழில் கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவால் சோகம்

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆறு மாத கர்ப்பிணியாக பெண் குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில், வீட்டாரால் காப்பற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
-
தமிழர் பகுதியில் தொடரும் மருத்துவ கொலைகள்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் உயிரிழந்தமையை அடுத்து அங்கு நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. மன்னார் – பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வைத்தியசாலை தரப்பினரின் கவனக் குறைவு காரணமாகவே குறித்த பெண்ணும் சிசுவும் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் உயிரிழந்த பெண்ணின்…
-
யாழ்ப்பாணத்தில் 23 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை!

யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில்…
-
13 வயது சிறுமி மாமன் மகனால் கர்ப்பம்

பாட்டியிடம் வளர்ந்த 13 வயது சிறுமியொருவர் தமது மாமன் மகனால் கர்ப்பமாக்கப்பட்ட சம்பவம் அங்குருவத்தோட்ட, வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பெற்றோர்கள் இன்றி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த சிறுமி மாமன் மகனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி தற்போது ஒன்றரை மாத கர்ப்பிணியாக உள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி வசித்த அதே வீட்டில் அவரது மாமாவின் மகனான 18 வயதுடைய இளைஞன் சிறுமியை பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியின் பாதுகாப்பின்மை குறித்து அங்குருவத்தோட்ட பொலிஸார் பல…
-
யாழ் பயணிகள் படகில் பிறந்த “கடல் குமரன்”

யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவில் இருந்து குறிக்கட்டுவான் ஜெட்டிக்கு வந்து கொண்டிருந்த படகில் பெண் ஒருவர் நேற்று முன் தினம் (20) ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். யாழ் வைத்தியசாலையில் குழந்தையும் தாயும் நலமுடன் இருக்கின்றனர். பிரசவத்திற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் குறித்த பெண் தனது கணவருடன் குறிக்கட்டுவானுக்கு படகில் வந்து கொண்டிருந்த போதே படகில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து படகு நடத்துனர் உடனடியாக டெல்ஃப்ட் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மருத்துவருடன்…
-
முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 55 வயது நபர்

முல்லைத்தீவில் 55 வயது சாப்பாட்டுக்கடை உரிமையாளரால் பாடசாலை சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்திவரும் நபர் ஒருவரால் 14 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினை அவதானித்த பெற்றோர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்குட்படுத்தியதில் குறித்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த விடயம்…
-
உயிரிழந்த நிலையில் குழந்தையை பிரசவித்த தாய்

மாத்தறை கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் 24 வயதுடைய தாய்க்கு உயிரிழந்த நிலையில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர் . உயிரிழந்த குழந்தையின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர் . இந்த தாய் தனிப்பட்ட வைத்தியரின் அறிவித்தலின் பேரில் கடந்த 22 ஆம் திகதி இறந்த தனது குழந்தையைப் பிரசவிப்பதற்காக கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் , இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் தாயைப் பரிசோதித்த…
-
மாகந்துரே மதுஷிடமிருந்த மனிதாபிமானம் கூட அரசியல்வாதிகளிடம் இல்லை

மாகந்துரே மதுஷிடமிருந்த மனிதாபிமானம் கூட , வெள்ளை அணிந்து பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் ஒருவரிடமாவது இருக்கும் என ஒரு கணம் கூட நம்பவில்லை என குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் வைத்தியர் மொஹமட் ஷாபி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக இருந்த விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பதெனிய , பொய் வழக்குகளில் பிடிபட்டு நான் தண்டிக்கப்பட்ட போது மௌனம் காத்தார். ஆனால் அவரது இரண்டாவது குழந்தை பிறக்க சிசேரியன் செய்தவர் தானே…
-
யாழில் 15 வயது மாணவி குழந்தை பெற காரணமாக தாயின் நண்பன்; பகீர் தகவல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் துன்னாலை மேற்கை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் மாலைப்பொழுதொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக்கு உதவியாக நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள் காலையில், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து, அது…