-
இலங்கையில் 7 மாணவர்களுக்கு மரணதண்டனை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள், 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும், 21 பெண்களும் அதில் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தென் மாகாணமே பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துளளார். இது…
-
அருச்சுனா எம்பியும் விரைவில் கம்பி எண்ணுவார்!

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லை என வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்தவர் இன்று 15 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர். ஊழலை ஒழிக்க போகிறேன் என சாவகச்சேரியில் இருந்து…
-
மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களையும் விமர்சித்துள்ளார். அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளையும் சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார். அவருடைய கைது…
-
பிள்ளையானின் பரிசீலனைக்கு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் அடிப்படை உரிமைகள் மனுவைப் பரிசீலனைக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிள்ளையான் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஏப்ரல் 12…
-
பிள்ளையான் ஒரு தேசப்பற்றாளர் ; போற்றுகின்றார் கம்மன்பில

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன் என பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பிள்ளையானுடன் 30 நிமிடங்கள் கலந்துரையாடினேன். சட்டத்தரணி என்ற அடிப்படையில் எனது சேவையாளருடன் இரகசியமாகக் கலந்துரையாடலாம். ஆனால், எமது உரையாடலை நான்கு பொலிஸார் முழுமையாகச் செவிமடுத்துக்கொண்டிருந்தனர்.…
-
சிறையில் உள்ள பிள்ளையானை காண முன்னாள் ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தினார். தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 9 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை…
-
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, குறித்த நபர் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக…
-
மிருகமாக நடத்தக் கூடாது ;சிறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

இரும்புச் சங்கிலியில் கைவிலங்குகள் பொருத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்துவது தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறைச்சாலை அதிகாரிகளை நேற்று (2) கடுமையாக எச்சரித்துள்ளார். ‘கைதிகளும் மனிதர்களே’ என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த நீதவான், அவர்களை மிருகமாக நடத்தக் கூடாது என்றார். நீதிமன்ற விடுமுறை காலம் என்பதால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் 9 நீதிமன்ற அறைகளில் உள்ள அனைத்து வழக்குகளும் மேலதிக நீதவான் பசன் அமரசேன தலைமையில் இலக்கம் 3 நீதிமன்றுக்கு நேற்று (02) அழைக்கப்பட்டது.…
-
விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை

விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த…