-
சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்; பிரான்சில் போராட்டம்

சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன. பிரான்சில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதும் அதற்கு மத்தியில் பலரும்…
-
ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்; லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க…
-
மட்டக்களப்பில் போராட்டகாரகள் – பொலிஸார் முறுகல்!

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை , இன்று சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை , கோட்டமுனை பாலத்தில் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் நிலையடுத்து அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இந்நாள், முன்னாள்…
-
இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கருதி போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த…
-
விமலின் போராட்டம்; அரசியல் நாடகமென கடும் விமர்சனம்!

கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சவால் முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் ஆகிய இரு விடயங்களை வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று (12) ஆரம்பித்தார். பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவராக செயல்படுகின்றார்…
-
தையிட்டி எங்கள் சொத்து ;யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். “தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை அகற்றுமாறு போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தையிட்டியில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டமை மற்றும் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தமை முதலிய செயல்களுக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
-
தையிட்டி போராட்டம்; பலர் கைது ; வேலன் சுவாமி மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக நேற்று ஞாயிற்று கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு…
-
செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கவுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி நாளைய தினம் வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், குறித்த போராட்டத்தை செம்மணி வளைவு பகுதியில் செய்யவிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எமது…
-
நேபாள இளைஞர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுரை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். பாராமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இறுதியில், அரசியலமைப்பு இல்லாத நேபாளம் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும் அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவதும் நிர்வாகத்தை பொறுப்பேற்ற இராணுவத்தின்…
-
நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10.00 மணி முதல் நாட்டின் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக நேபாள இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள…