Tag: Puttalam

  • திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் பயணிகள் பேருந்து!

    திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் பயணிகள் பேருந்து!

    கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மாதம்பே கவுடுவாவ பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (10-10-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை கொழும்பிலிருந்து புறப்படும் போது ஏறக்குறைய 50 பயணிகளுடன் பயணித்த பேருந்து பயணத்தின் நடுவில் தீப்பிடித்துள்ளது. குறித்த சம்பவத்தில், பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உள்ளூர் மக்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர உதவிய போது பேருந்து…

  • தகராறால் காதலர்கள் தற்கொலை!

    தகராறால் காதலர்கள் தற்கொலை!

    புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் காதலர்கள் இருவரும் தத்தமது வீடுகளில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்யை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மதுரங்குளி, முக்குதொடுவாய் பகுதியைச் சேர்ந்த நில்ஷானி சுமோதிகா என்ற 19 வயதுடைய யுவதியும், காதலனுமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உடப்பு, சின்னப்பாடு பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய லசிது லிவேரா என்ற இளைஞன் தற்கொலை செய்து கொண்ட யுவதியுடன் நெருங்கி பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் பாடசாலைக்காலம் முதல் காதல் உறவில் இருந்துள்ளனர். லசிது…

  • வீடொன்றில் நபரொருவர் அடித்துக் கொலை

    வீடொன்றில் நபரொருவர் அடித்துக் கொலை

    புத்தளம், ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வடத்த கோட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவரது சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான…

  • புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த குடும்பஸ்தர்!

    புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த குடும்பஸ்தர்!

    புத்தளத்தில் உள்ள பகுதியொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மின்சாரம் பழுது பார்க்கும் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மஹகும்புக்கடவல, கிவுல பகுதியில் நேற்று முன்தினம் இரவு (19-08-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அட்டவில்லு பகுதியில் வசித்து வந்த 56 வயதான ஜயசிங்க முதியன்சேலாகே ஜயந்த குமார அதுலசிறி பண்டார என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிவுல பகுதியில் வீடொன்றின் பின்பக்கமாக சடலம் ஒன்று கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ…

  • புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீவைத்து விட்டு தப்பியோடிய நபர்!

    புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீவைத்து விட்டு தப்பியோடிய நபர்!

    வென்னப்புவ பிரதேசத்தில் நான்கு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வென்னப்புவ லேக் வீதியில் உள்ள வாகன திருத்தும் நிலையமொன்றில் பழுதுபார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட குறித்த சொகுசு பஸ்கள் இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், அருகில் உள்ள சிசிரிவி கமராவில் இருந்து, ஒரு நபர் வந்து பஸ்களுக்கு  தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த…

  • இணைய வழி மோசடியில் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்

    இணைய வழி மோசடியில் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்

    புத்தளம் பிரதேசத்தில் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 44 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. சந்தேக நபர்கள் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணினிகள் மற்றும் பல சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மெலும் இது தொடர்பான மேலதிக…

  • புத்தளத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்!

    புத்தளத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்!

    புத்தளம் – மன்னார் வீதியில் உள்ள பகுதியில் வசித்து வந்த இளம் தாய் ஒருவர் மின்சாரத் தாக்கி பரிதாபமாக  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (09-07-2024)  4 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 28 வயதான பாபு துஷ்யந்தினி என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் நேற்றிரவு இரவுச் சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காக தயாரான போது திடீரென மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த…

  • மதுவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கரைக்கு…

    மதுவால் உயிரிழந்தவர்களின் உடல்கள்  கரைக்கு…

    கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்தி உயிரிழந்த “டெவோன் 05” மீன்பிடி படகிலிருந்த 04 மீனவர்களின் சடலங்களும் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சடலங்கள் அடங்கிய படகு இன்று (03) காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக “அத தெரண” செய்தியாளர் குறிப்பிட்டார். இயந்திரக் கோளாறுக்குள்ளான படகு , மற்றுமொரு படகினைப் பயன்படுத்தி தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நீதவான் பிரவேசித்து சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளும் வரை சடலங்கள்…

  • சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

    சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

    புத்தளம் பிரதேசத்தில் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான கடற்கரை பகுதியில் பெண்ணின் சடலமொன்று சிதைவடைந்த நிலையில் நேற்று (2) மீட்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • புத்தளத்தில் கார் மீது முறிந்து விழுந்த மரம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்!

    புத்தளத்தில் கார் மீது முறிந்து விழுந்த மரம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்!

    புத்தளத்தில் உள்ள பகுதியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்றையதினம் (24-05-2024) பிற்பகல் மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்து. காரில் இருந்த மூவர் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் கொஸ்வாடிய பகுதியில்…