Tag: Puttalam

  • புத்தளத்தில் நாளை மீண்டும் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்!

    புத்தளத்தில் நாளை மீண்டும் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்!

    புத்தளத்தில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (22-05-2024) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், காலநிலைக்கு ஏற்ப வேறுவிதமாக தீர்மானிக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாணப் பணிப்பாளர் தெரிவித்தார். சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றும் இன்றும் (21) விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • புத்தளத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

    புத்தளத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

    தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் இரண்டு நாட்கள்  மூடப்படும் என வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை (21-05-2024), நாளை மறுதினம் (22-05-2024) பாடசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • புத்தளம் பாதையில் ரயில் சேவைகள் தடை!

    புத்தளம் பாதையில் ரயில் சேவைகள் தடை!

    களனியிலிருந்து பிரதான பாதை மற்றும் புத்தளம் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.