Tag: Refugee

  • தமிழக மூகாமில் இருந்து தாயகம் தப்பி வந்த இலங்கை குடும்பம்

    தமிழக மூகாமில் இருந்து தாயகம் தப்பி வந்த இலங்கை குடும்பம்

    தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் நாட்டில்…

  • கடன் தொல்லையால் தமிழகத்திற்கு ஓடிய இலங்கை குடும்பம்

    கடன் தொல்லையால் தமிழகத்திற்கு ஓடிய இலங்கை குடும்பம்

    கண்டியை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும், தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் 5 பேரையும் மீட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.  

  • டிரம்ப் உத்தரவால் பெண் ஊடகவியலாளர் மீது துப்பாக்கி சூடு

    டிரம்ப் உத்தரவால் பெண் ஊடகவியலாளர் மீது துப்பாக்கி சூடு

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் செய்தியாளர் லாரன் டோமாசி மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது. கலவரம் நடைபெறும் பகுதிக்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து கமெரா முன்பு குறித்த செய்தியாளர் லாரன் விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் ரப்பர் புல்லட் துப்பாக்கியால் லாரனை குறிவைத்து சுட்டார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரனின் காலில் ரப்பர் புல்லட் பாய்ந்தது. அவர் வலியால் அலறியபடி…

  • சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

    சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற…

  • மீண்டும் முல்லைத்தீவுக்கே அனுப்பப்பட்ட மியன்மார் அகதிகள்

    மீண்டும் முல்லைத்தீவுக்கே அனுப்பப்பட்ட மியன்மார் அகதிகள்

    மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்துக்கு நேற்றையதினம் மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் கடற்படை தளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் தஞ்சம் கோரிய 115…

  • இலங்கை வந்த மியன்மார் பிரஜைகள் திருகோணமலையில்

    இலங்கை வந்த மியன்மார் பிரஜைகள் திருகோணமலையில்

    திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (20) இரவு தங்கவைக்கப்பட்டிருந்த 104 மியன்மார் பிரஜைகளும் இன்று (21) காலை 7.30 மணிக்குப் பின்னர் பொலிஸாரினால் 2 பஸ்களில் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த பயணிகள் அடங்கிய பஸ்கள் இடைநடுவே சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து, பின்னர், பகல் வேளையில் திருகோணமலைக்கு அகதிகள் மீள அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த மியன்மார் பிரஜைகளை மிரிஹானை முகாமில் தங்கவைப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காததன்…

  • முல்லைத்தீவுக்கு வந்த மியான்மார் அகதிகள் திருகோணமலைக்கு…

    முல்லைத்தீவுக்கு வந்த மியான்மார் அகதிகள் திருகோணமலைக்கு…

    முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று(20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. படகில் வந்தவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் படகொன்று…