Tag: School

  • தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

    தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

    தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங் ஜே வான் (Myang Jae Wan) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக 8 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டேஜியானைச் சேர்ந்த மையாங் ஜே வான் (வயது 48) என்ற ஆசிரியை, கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் வைத்து 8 வயது சிறுமியைக்…

  • மீண்டும் மிரட்டும் கொரோனா; மலேசியாவில் ஆயிரக்கணக்கில் பாதிப்பு

    மீண்டும் மிரட்டும் கொரோனா; மலேசியாவில் ஆயிரக்கணக்கில் பாதிப்பு

    மலேசியாவில் கொரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சலால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது ஓய்ந்து விட்டாலும், குளிர் காலம் தொடங்கும்போது அதன் வேரியண்ட் எங்கேயாவது உண்டாகி அச்சுறுத்தல் அளிக்கிறது. அவ்வாறாக கடந்த முறை இந்தியாவில் கண்டறியப்பட்ட எக்ஸ்.எஃப்.ஜி வகை கொரோனா தற்போது மலேசியாவில் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட இன்புளூயன்சா காய்ச்சல் போன்றவற்றால் ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 97 ஆக…

  • தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ; அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ் மாணவன்!

    தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ; அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ் மாணவன்!

    வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் காலி மாவட்டம் அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் சந்துனி அமயா சிங்கள மொழி மூலம் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக 194 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை…

  • கொழும்பு பாடசாலை மாணவி விபரீத முடிவால் பலி

    கொழும்பு பாடசாலை மாணவி விபரீத முடிவால் பலி

    கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஹோமாகம, கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த மாணவி சுகயீனம் காரணமாக நீண்ட நாட்களாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். பின்னர் இந்த மாணவி மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில், விடுமுறை எடுத்த நாட்களுக்காக வைத்திய அறிக்கை ஒன்றை வழங்குமாறு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால்…

  • நேரத்தை நீடித்தால் சம்பளம் அதிகரிக்க வேண்டும்

    நேரத்தை நீடித்தால் சம்பளம் அதிகரிக்க வேண்டும்

    அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகளை வழங்கும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் இலங்கை சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்துகிறது. இந்த முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமல் விஜேரத்ன, பின்வருமாறு கூறினார்: “30 நிமிட நீட்டிப்பு, 20 நாள் மாதாந்திர வேலை வாரத்துடன் 10 மணிநேர கூடுதல் வேலையைச் சேர்க்கிறது. அது ஆசிரியர்களின்…

  • வெளியானது 2024 O/L பரீட்சை முடிவுகள்!

    வெளியானது 2024 O/L பரீட்சை முடிவுகள்!

    2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இந்த எண்ணிக்கை பரீட்சை எழுதிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். மேலும், ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று மொத்தம் 13,392 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும் என்றும் அவர் மேலும்…

  • பேருந்தில் இருந்து விழுந்த மாணவன்; சாரதி, நடத்துனர் இடைநீக்கம்

    பேருந்தில் இருந்து விழுந்த மாணவன்; சாரதி, நடத்துனர் இடைநீக்கம்

    வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (03) பதிவாகியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோவையும் அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை…

  • சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லையென தமிழ் மாணவன் போராட்டம்

    சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லையென தமிழ் மாணவன் போராட்டம்

    வவுனியா – பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் தன்னை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து மாணவன் தனி நபர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். வலய கல்வி அலுவலகம் முன் மாணவன் சாத்வீக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார். மேலும், பெற்றோரின் சம்மத கடிதமும் பெறப்பட்டிருந்த நிலையில், குறித்த மாணவனை மட்டும் விட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • மட்டக்களப்பில் அதிபர் – ஆசிரியர் மீது வாள் வெட்டு

    மட்டக்களப்பில் அதிபர் – ஆசிரியர் மீது வாள் வெட்டு

    மட்டக்களப்பு, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

  • அம்பாறை பாடசாலை ஒன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர்

    அம்பாறை பாடசாலை ஒன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர்

    அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 15ஆம் திகதி பாடசாலை நேரத்திற்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன. அன்றைய தினம் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல மாணவர்கள் தண்ணீர் விசிறி விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியர் பாடசாலை அதிபருக்கு தெரிவித்திருந்தார். இதன்படி,…