-
தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்திலிருந்து பாடசாலை மாணவி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் கீழே குதித்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
-
17 வயது பாடசாலை மாணவியை கடத்தி கூட்டு வன்புணர்வு; இலங்கையில் அதிர்ச்சி

ஹன்வெல்ல, அம்குகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் ஐந்து இளைஞர்களைக் கண்டுபிடிப்பதற்காக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (21) கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி, தனது காதலனைச் சந்தித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ததாக, சிறுமி அளித்த…
-
தந்தை மரணம்… தாய் வெளிநாட்டில்! பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி

மின்சார தையல் இயந்திரத்தை பாதுகாப்பற்ற முறையில் பவர் சாக்கெட்டில் பொருத்த முற்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நுகேகொட மஹாமாயா பாலிகா வித்தியாலய மாணவி ஆவார். பாட்டி சுகவீனம் காரணமாக வேறொரு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், 17 வயதுடைய சிறுமி வீட்டில் இயங்காத தையல் இயந்திரத்தை பயன்படுத்த முற்பட்டுள்ளார். தையல் இயந்திரத்தின் மோட்டார் மற்றும் வயருடன் இணைக்கப்பட்டிருந்த பிளக்கை அறையிலுள்ள சுவர் சுவிட்ச் சாக்கெட்டுடன் இணைக்க மாணவன் முயற்சித்ததாகவும்…
-
முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 55 வயது நபர்

முல்லைத்தீவில் 55 வயது சாப்பாட்டுக்கடை உரிமையாளரால் பாடசாலை சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்திவரும் நபர் ஒருவரால் 14 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினை அவதானித்த பெற்றோர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்குட்படுத்தியதில் குறித்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த விடயம்…
-
யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர்

யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான்…