-
பிளேடால் மாணவனின் கழுத்தை அறுத்த மாணவன்; இலங்கையில் பயங்கரம்

மாணவர்கள் இருவருக்கு இடையில், வியாழக்கிழமை (15) ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிட்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் க.பொ.த.உயர்தரம் கற்கும் மாணவன் இதே பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரத்தில் கற்கும் மாணவனை தாக்கி சவர அலகால் கழுத்தை அறுத்துள்ளார். படுகாயமடைந்த காயமடைந்த மாணவன் முதலில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்…
-
16 சிறுவர்களை சீரழித்த சிறிதரனின் சகாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

16 சிறுவர்களை சீரழித்த சிறிதரனின் சகா மீண்டும் விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் விளையாட்டு துறை அமைப்பாளராகவும் ஸ்ரீதரனின் இணைப்பாளராகவும் அலன் செயற்பட்டு வருகின்றார். இவரிடம் குறித்த விளையாட்டு பயிற்சிக்காக சென்று சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோத்திற்குள்ளாக்கியுள்ளார். குறித்த சிறுவர்கள் 10 தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார். இவர்களைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு…
-
உயர்தர பரீட்சையில் வவுனியா மாணவி சாதனை

உயர்தர பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் சந்திரசேகரன் ருக்சிகா என்ற மாணவி 2A-1B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 134…
-
வழுக்கி விழுந்து சிறுவன் பலி

தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது 40 அடி உயரமான வழுக்கும் (கிறீஸ்) மரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததில் 16 வயதான சிறுவன் உயிரிழந்த சம்பவம், பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பிடிகல பொலிஸ் பிரிவின் அமுகொட பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்காக ஒரு குழு வழுக்கும் மரத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் வழுக்கும் மரத்தில் ஏறும்போது விழுந்து எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
-
யாழ் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் வன்முறை கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெற்று வருகின்றது. குறித்த பரீட்சை நிலையத்தில் , அப்பகுதியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் பரீட்சை எழுதி வருகின்றனர். அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை பரீட்சை ஆரம்பமாக இருந்த வேளை இரு பாடசாலைகளின் மாணவர்கள்…
-
சிங்களப் பாடசாலை ஒன்றில் தமிழ் மாணவனின் காலகளை எரித்த காவாலி மாணவர்கள்

நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சிறுவனின் கால்களை ரினர் ஊற்றி சக மாணவர்கள் எரித்துள்ளதாக தெரியவருகிறது. கம்பளை வைத்தியசாலையில் பல நாட்கள் சிகிச்சை பெற்ற குறித்த மாணவன் தற்போது வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகமும் பொலிசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
-
முல்லைத்தீவு பாடசாலையை மூடி பெற்றோர் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி நேற்றையதினம் பாடசாலை வாயில் கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதும் காலை பதினொரு மணிவரை குறித்த…
-
முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளரின் திருகு தாளங்கள்

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் .ஆர்.தமிழ்மாறன் தொடர் முறைகேடுகள் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதமர் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரான தமிழ் மாறன் தொடர்பில் பல்வேறு முறை பாடுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட நிலையில் கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் வடக்கு கல்வியில் உள்ள முறைகேடுகள் தொடர்பில்…
-
முல்லைத்தீவில் போதையில் மாணவிகள் முன் ஆடிய கான்ஸ்டபிள்

முல்லைத்தீவில் மதுபோதையில் அரச பாடசாலைக்குள் நுழைந்து மாணவிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக மல்லாவி பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் ஒரு கான்ஸ்டபிள் ஆவார். மல்லாவி பகுதியில் உள்ள ஒரு அரசாங்க பாடசாலையில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் குடிபோதையில் வந்து பல மாணவிகளைத் துன்புறுத்துவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மல்லாவி பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று,…
-
யாழில் 25 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த பாடசாலை
யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகேயன் வித்தியாசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற கிராமத்தில் இருந்தாலும் அந்த பாடசாலையில் கல்வி பயின்று சாதனை புரிந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.