-
ஒரே ஒரு ‘செல்பி’; ரஷ்ய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய யானை

கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், அந்த யானைக்கு அருகில் சென்று நிழற்படம் எடுக்க முயன்றபோது யானை அவரைத் தாக்கியுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவருடன் சென்ற கணவர் காயமின்றி தப்பியுள்ளார்.…
-
செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தவாறு செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். பதுளை பிங்கயட்ட, அமுனுவெல்பிட்டிய வீதிக்கு அருகில் இன்று (19) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் இருந்தே வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்துள்ளார். விபத்தில் இறந்தவர் 50 வயதான பெர்சினோமா ஓல்கா என்ற ரஷ்ய பெண் என தெரியவந்துள்ளது. இறந்தவர் ரஷ்யாவிலிருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு சுற்றுலா…
-
உயிரிழப்பதற்கு முன் கடலில் மிதந்த பாட்டிலுடன் செல்பி எடுத்த மீனவர்கள்!

மீன்பிடி தொழிலுக்கு சென்ற 6 மீனவர் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தி நோய்வாய்பட்டு 5 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘Devon 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, கடலில்…