-
தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங் ஜே வான் (Myang Jae Wan) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக 8 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டேஜியானைச் சேர்ந்த மையாங் ஜே வான் (வயது 48) என்ற ஆசிரியை, கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் வைத்து 8 வயது சிறுமியைக்…
-
விமானங்களை எதிர்க்கும் ஏவுகணை சோதனை-அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில், வட கொரியா சமீபத்தில் விமானங்களை எதிர்க்கும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனை, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சிகளுக்கு பதிலாக நடத்தப்பட்டது. கிம் ஜாங் உன் நேரில் இந்த சோதனையை மேற்பார்வையிட்டார், இது நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று வட கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட…
-
தென்கொரியா விமான விபத்து… இரங்கலைத் தெரிவித்த இலங்கை அரசாங்கம்!

முவான் விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் 7C 2216 விபத்துக்குள்ளானதில் 160 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தென் கொரியாவிற்கு இலங்கை அரசாங்கம் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டு சம்பவத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. “இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இழப்பை சமாளிக்கும் தைரியத்தை அவர்கள் பெறட்டும்” என்று…
-
177-உயிரிழப்பு!விபத்துக்குள்ளான தென்கொரிய விமானம்.

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஜேஜூ ஏர் நிறுவனத்தின் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது; ஒரு பயணி மற்றும் ஒரு விமான பணியாளர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் 120 உடல்களை மீட்டுள்ளனர்; அதில் 54 ஆண்கள், 57 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் 13 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. விமானம் ஓடுபாதையில்…
-
வெளிநாட்டில் ஒளிபரப்பாக போகும் ரஜினியின் வேட்டையன் – எந்த நாடு தெரியுமா..?

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். வேட்டையன் திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இத்திரைப்படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இன்றைய தினம் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரானது வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. மிக முக்கியமான விஷயமாக கருதப்படுவது முதல் முறையாக இதுவரை…
-
தற்கொலை செய்து கொண்ட ரோபோ… இரங்கல் தெரிவித்த நகர மக்கள்!

தென் கொரிய நாட்டில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து செயலிழந்த நிலையில், ரொபோவை பணியாளர்கள் மீட்டுள்ளனர். படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ ஒரு இடத்தில் சுழன்று, பின்னர் படிக்கட்டில் இருந்து…
-
தென்கொரியா மீது குப்பைகளை கொட்டும் வடகொரியா

வடகொரியா ஏராளமான ராட்சத பலூன்களில் குப்பைகளில் நிரப்பி தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் பேட்டரிகள், இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். அத்துடன் வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .
