-
இலஞ்சம் பெற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி அதிரடி கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவர் திங்கட்கிழமை (20-01-2025) வெலிசர தடுப்பு மையத்தில் 500,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்காக, அதே நிலையத்தில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே குறித்த தொகையை…
-
கிளிநொச்சியில் உறவினர் இல்லாத வேளையில் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்!

கிளிநொச்சி மாவட்டம் – இராமநாதபுரம், மாயவனூர் பகுதியில் உறவினர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 05-01-2025 ஆம் திகதி, வீட்டில் உறவினர் இல்லாத வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்து சுமார் 12 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, கடந்த 12 ஆம் திகதி சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது…
-
கண்டியில் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து உயிரிழந்த நபர்!

கண்டி – தெல்தெனிய பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபரொருவரே படகில் இருந்து வீழ்ந்து இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் அம்பகொடே, கென்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொழும்பில் கட்டுமான தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி!

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி மாலை காசல் வீதி பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9mm கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்திற்கு 119 அவசர நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகாரிகள் குழு உடனடியாகப் பதிலளித்து, தற்போது கட்டுமானத்தில் உள்ள வெற்று நிலத்தில் இரண்டடி ஆழமான குழியில் புதைக்கப்பட்ட ஆயுதம் – உடைந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி…
-
நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த 4 வயதான தினேஷ் ஹம்சின் என்ற சிறுவன் இன்றையதினம் (17-01-2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் தாயொருவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்குடன் தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் (16-01-2025) நேற்று மாலை குதித்திருந்தார். இதனையடுத்து தாய் அன்றையதினமே மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…
-
மாத்தறையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது!

மாத்தறை வெவஹமந்துவ பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி உட்பட 2 துப்பாக்கிகள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) மாத்தறை உப பிரிவு அதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, டி-56 துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 60 தோட்டாக்கள், இரண்டு டி-56…
-
இந்தியாவில் கைதான இலங்கையின் பாதாள உலக நபரான போடி லஸ்ஸி!

பிணை வழங்கப்பட்ட பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற இலங்கையின் பாதாள உலக நபரும் போதைப்பொருள் மன்னனுமான “பொடி லஸ்ஸி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது தொடர்பில் இன்டர்போல் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொடி லஸ்ஸி தனக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் இந்தியாவில் பதுங்கியிருப்பதாகவும் இலங்கை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, பதில் பொலிஸ்…
-
கொழும்பில் பாடசாலை ஒன்றிற்கு அருகில் துப்பாக்கிச்சூடு… தப்பியோடிய இருவர்!

கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் போது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
‘ஐஸ்’ போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த நீதிமன்ற ஊழியர் அதிரடி கைது!

நீதிமன்ற ஊழியர் ஒருவர் 10 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் நீதிமன்ற இலக்கம் 03 இல் பணிபுரிபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஹவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் அந்த பகுதிக்குள் ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தற்காலிகமாக தங்கியிருந்த வெல்லம்பிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
-
மட்டக்களப்பில் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை!

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 2 வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்றையதினம் (13-01-2025) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஏறாவூர் 2ஆம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த 2 வயதான முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் உள்ள கிணற்றிற்கு அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில்,…