-
இலங்கையில் கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தளித்த காதலன்

வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு தனது காதலியை அழைத்துச் சென்று, ‘ஐஸ்’ என்ற போதைப்பொருளைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி, பின்னர் தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஒரு பாரதூரமான சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய வெலிவேரிய காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன. 8 ஆம் திகதி இரவு 10.00…
-
கர்ப்பிணி பெண்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முறை மட்டும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஒரு திட்டமாக, இந்தக் கொடுப்பனவு டிசம்பர் 16…
-
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்; தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வடக்கில்…
-
கொடுக்கல் வாங்கலால் இளைஞன் கொலை

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலின்போது, காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நபர் ஒருவர், அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக…
-
பிள்ளைக்கு பொறுப்பேற்க மறுக்கும் இலங்கை கிரிகெட் வீரர்; மரபணு பரிசோதனைக்கு மறுப்பு

விமானப் பணிப்பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. மனுதாரரான செவ்வந்தி சேனாதீர என்பவர், சாமிக கருணாரத்னவுடன் தனக்கு இருந்த தொடர்பினால் தமக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை சாமிக்க கருணாரத்னவே தந்தை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை கோரியிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சாமிக கருணாரத்னவின்…
-
பாலியல் துஷ்பிரயோகம்; அமெரிக்காவில் இலங்கையை பேராசிரியர் கைது!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமித் குணசேகர என்ற அமெரிக்காவின் ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் செயலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 12 ஆம் திகதியன்று டெட்ரோய்டில் அவர் கைது செய்யப்பட்டார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்ற வரலாறு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற சுமித் குணசேகர,தாம் சிறுவர்…
-
இலங்கையில் பயங்கரம்; 61 வயது கணவனை அடித்துகொன்ற மனைவி

மிஹிந்தலை, மஹகிரிந்தேகம பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில், கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக இக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர் மஹாகிரிந்தேகமவைச் சேர்ந்த 61 வயதான நபர் ஆவார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
நாவற்காடு பகுதியில் ஆண் , பெண் கொலை

நுரைச்சோலை – நாவற்காடு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆணொருவரும் இரண்டு பெண்களும், ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (03) இரவு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய ஆண் ஒருவரும் 35 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நாவற்காடு பகுதியை சேர்ந்த…
-
மன்னாரில் ஆயிரக்கணக்கான கால் நடைகளை உயிரிழப்பு

மன்னாரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இந் நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள் (மாடு) கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த…
