-
கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ; பையில் இருந்து மீட்பு

இப்லோகம, கொன்வேவா பகுதியில் தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்தது. நவியாழக்கிழமை(02) காலை 6.00 மணியளவில் தனது முன் கதவைத் திறந்தபோது பை அசைவதைக் கண்டதாக அவர் கூறினார். அதை அவிழ்த்தபோது, குழந்தை உள்ளே இருப்பதையும், குழந்தை ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்ததைக் காட்டும் மருத்துவ விளக்கப்படத்தையும் கண்டார். குழந்தை நிகவெரட்டிய…
-
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான 6,000 தங்கப் பொருட்கள் ஒப்படைப்பு

குற்றப்புலனாய்வு துறை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களிடம் தெரிவித்தன் படி விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவச் செயல்பாடுகளின்போது முகாம்கள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் இவை அடங்குகின்றன. இதற்கு முன்னர், நீதிமன்றம் தேசிய ரத்தின, ஆபரண ஆணையத்துக்கு தங்கத்தை ஆய்வு செய்து விரிவான…
-
மீரிகம பகுதியில் பயங்கரம்; குடும்ப பெண் கொலை

மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவராவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…
-
ஜெனிவாவில் தமிழ் தேசியம் பேசும் அரசியலாளர்கள்

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைச் சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், சுவிஸ்லாந்து அரச ஏற்பாட்டில் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கட்சிகளின் சில உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர். யாழ் மாநகர சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மூத்த விரிவுரையாளர் கபிலன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் தமிழ் உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் பயணத்தில் இணைந்துள்ளனர். அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சத்தியலிங்கம் உள்ளிட்ட சிலரும் அங்கு சென்றிருக்கின்றனர்.…
-
ஆட்டம் காட்டிய அனுர அரசாங்கம்; வீட்டை காலி செய்யும் மஹிந்த ராஜபக்க்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை வெளியேறவுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேற முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை – தங்காலையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று மாலை 4…
-
யாராவது கையை உயர்த்தி கூறுங்கள், பிரபாகரன் பயங்கரவாதி என்று!

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருக்கின்றனார். தனது உரையை ஆரம்பித்த இராமநாதன் அர்ச்சுனா, நான் சிங்களத்தில் பேசுவது உங்களுக்கு விருப்பம்தானே. நான், கேட்கின்றேன். இங்கிருக்கும் யாராவது கையை உயர்த்தி கூறுங்கள், பிரபாகரன் பயங்கரவாதி என்று, எனினும், யாரும் கையை உயர்த்தவில்லை. எனினும், உங்களுடைய ரோஹன விஜயவீர, பயங்கரவாதி இல்லை என்று நான் கையை உயர்த்தி கூறுவேன் என்றார்.
-
நேபாள இளைஞர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுரை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். பாராமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இறுதியில், அரசியலமைப்பு இல்லாத நேபாளம் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும் அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவதும் நிர்வாகத்தை பொறுப்பேற்ற இராணுவத்தின்…
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவை: சர்வதேச விசாரணையை நிராகரித்தது ஜேவிபி அரசு!

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்தார். உள்நாட்டு செயல்முறைகள் மூலம் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.…
-
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் உயிரை மாய்த்த இளைஞன்

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச்…
-
பேருந்தில் பல்கலை மாணவிக்கு பாலியல் சீண்டல்

பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. ஹொரணையில் இருந்து கொழும்புக்கு தனியார் பேருந்தொன்றில் பயணித்த 27 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர், அவரது பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபரால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பேருந்தின் உள்ளே குரல் எழுப்பி தமக்கு நடந்ததை வெளிப்படுத்தியபோது, பேருந்தினுள் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சந்தேக நபரைப்…