-
நீரில் மிதந்து வந்த இரு சடலங்கள்

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் ஹெட்டிகம பகுதியில் உள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலம் அருகே மிதந்தவாறு காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணம் நீரில் மூழ்கி இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மரணமா? என்பது குறித்து கும்புக்கெட்டே பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இதேபோல், பல்லேகலே பொலிஸ் பிரிவின் திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்தவாறு காணப்பட்ட ஆண் ஒருவரின்…
-
கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சி

இலங்கையில் இடம்பெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் 100 பேரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், 98பேர் குற்றமற்றவர்களாக வீடுசெல்கிறார்கள். இந்த கலாசாரத்தை மாற்றுவதாக இருந்தால், அரசியலமைப்பில் இந்த உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. விசாரணைகளை பலப்படுத்த வேண்டி இருக்கிறது. விசாரணைகளின் அறிக்கையின்…
-
இலங்கையை உலுக்கிய கோர விபத்து; 15 பேர் பலி; சுற்றுலா சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவின் 24வது கிலோமீட்டர் தூண் அருகில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேருந்தில் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 34 பயணிகள் இருந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (04) இரவு 9 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 23வது மற்றும் 24வது கிலோமீட்டர் தூண்களுக்கு…
-
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ; அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ் மாணவன்!

வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் காலி மாவட்டம் அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் சந்துனி அமயா சிங்கள மொழி மூலம் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக 194 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை…
-
போலி காருடன் பெண் வைத்தியர் கைது

போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மகிழுந்தை ஓட்டி வந்த பெண் வைத்தியர் ஒருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் கண்டியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் வைத்தியர் ஆவார். கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர், மகிழுந்து தனது கணவருக்கு சொந்தமானது என கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இவர் அந்த மகிழுந்துக்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, இது குறித்து விசாரணையில் அவரது கணவரின் சகோதரரின் மகிழுந்தின் இலக்க…
-
வைத்தியருக்கு சொந்தமான நிலத்தில் பையொன்றில் இருந்த மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு

வெயங்கொடை – நைவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் பையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். வீட்டின் கேரேஜை இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு அறையில் கிராம அலுவலர் அலுவலகம் அமைந்திருந்தது. கிராம அலுவலர், எலும்புக்கூடுகள் அடங்கிய பையைக் கவனித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும்…
-
தமிழ்த் தேசியக் கட்சிகள் கையெழுத்துப் போராட்டம்.!

யாழ்ப்பாணம் செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித இனப்படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் சமர்ப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது…
-
பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைதான முன்னாள் போராளி அரவிந்தன் விடுதலை!

வவுனியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைதாகி ஒன்றரை வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அரவிந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். மக்கள் பேரவை மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு, போராளிகள் நலன்புரிச்சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் அரவிந்தன் விடுதலைக்காக பாடுபட்டிருந்தன. சமூக ஊடகங்களில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை பாராட்டி கருத்துக்களை வெளியிட்டதான வழக்கில் பிணை கிடைத்திருந்த நிலையில் புதிதாக மூன்று வழக்குகள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் முன்னைய…
-
அனுரவிடம் நீதி கேட்டு கடிதம் எழுதியது முட்டாள் தனம்

யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதை குழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற வன்மம் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் செம்மணி மனித புதைகுழி இலங்கை தீவில் தமிழ்…
-
மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களையும் விமர்சித்துள்ளார். அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளையும் சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார். அவருடைய கைது…