-
நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10.00 மணி முதல் நாட்டின் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக நேபாள இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள…
-
யாழ்ப்பாணத்தை பெருமைப்படுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A320 – 200 ரக விமானம் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டுள்ளது. சமீபத்தில் தெற்காசியாவின் சிறந்த விமானச் சேவை என அங்கீகாரம் பெற்ற இந்தத் தேசிய விமான நிறுவனம், யாழ்ப்பாணத்தின் வளமான பாரம்பரியத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் மதிக்கும் ஒரு அடையாளபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இலங்கை ஏர்லைன்ஸ் எடுத்த இந்தப் பெயர் சூட்டும் முடிவு, பிராந்திய அங்கீகாரத்தை வலுப்படுத்தவும், தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடவும் ஒரு…
-
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்; திருப்பிவிடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமாங்கள்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சரியான வழித்தடங்களை CAASL…
-
ஶ்ரீலங்கன் விமானம் அவசர தரையிறக்கம்

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தைப் பரிசோதித்த பின்னர், குறைபாட்டைச் சரிசெய்ய சில மணி நேரம் ஆகும் எனத் தெரிவித்ததால், பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்கவைக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க அனுமதிக்க மறுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர், இலங்கைத் தூதரின்…
-
ஸ்ரீலங்கன் விமானத்தில் யாழ் புலம்பெயர் தமிழர் பாலியல்சேட்டை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானப் பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர், தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை…
-
கட்டுநாயக்காவில் பெறுமதியான குஷ் கஞ்சாவுடன் பிரித்தானிய பிரஜை கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜை ஒருவர் 440 மில்லியன் பெறுமதியான 43 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார் 43 கிலோ மற்றும் 600 கிராம் எடை கொண்ட இந்த போதைப்பொருள், சுங்க வரலாற்றில் மிகப்பெரிய குஷ் போதைப்பொருள் சோதனை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானிய பிரஜை கொண்டு வந்த 2 பயணப் பொதிகளில் இந்த போதைப்பொருள் காணப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி 44 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.…