-
பிரான்ஸ் அரசாங்கத்தை ஏமாற்றிய இலங்கை தமிழ் தம்பதி

பிரான்ஸ் வொண்டி (Bondy) பகுதியில் வசித்து வந்த வவுனியாவைச் சேர்ந்த 39 வயது ஆணும், 36 வயது பெண்ணும் அரச சலுகைகளை (Benefits)ஏமாற்றிப் பெறுவதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. சட்டபூர்வமாகத் திருமணம் முடித்த இவர்கள், அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் ‘தனிநபர் பெற்றோருக்கான’ (Single Parent) உதவித்தொகையைப் பெறுவதற்காகப் போலியாக விவாகரத்து (Fake Divorce) செய்துகொண்டனர். விவாகரத்து பெற்றதாகக் காட்டி, கணவன் ஒரு வீட்டிலும் மனைவி ஒரு வீட்டிலும் தனித்தனியாக வசிப்பதாகப் பதிவு செய்து, இருவருக்கான அரச…
-
ஐநா மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதியை கிடப்பில் வைத்திருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் யாழ் தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் தமிழ் மக்களுடைய பொறுப்புக் கூறல் விவகாரம் பேசப்பட்டு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கிடப்பில் கிடக்கின்றது. ஐநா மனித உரிமைகள் பேரவை தமிழ்…
-
ஈழத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரி கடிதத்தால் சர்ச்சை

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஒருவருக்கு புகலிடக்கோரிக்கை விடயத்தில் ஆதரவாக கடிதம் எழுதினார் என கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக ஊடகமொன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதேவேளை கனேடிய பிரதமர் மார்க் கார்னி இது தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கனடா அதிகாரிகள் கருதிய நபர் ஒருவருக்கு கனடா பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் என கோரும் கடிதத்தை ஹரி ஆனந்தசங்கரி எழுதினார் என குளோபல்…
-
இலங்கை சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்; பிரான்சிலும் போராட்டம்!

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று பிரான்ஸ் பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அத்துடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன. எதிர்வரும்…
-
லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன் ஈழத் தமிழர்கள் போராட்டம்

பிரித்தானியா லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களுக்கு கரிநாள் என்ற கோசத்துடன் இன்றை போராட்டம் நடந்தது. அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் இப்போராட்டம் அனைத்துலக தொடர்பகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ்தேசிய அமைப்புக்கள் இணைந்து நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் மக்களுக்கு எதிரான முரணான நிறைய விடயங்கள்; கடுமையாக சாடிய சுகாஸ்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முரணான நிறைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் கடுமையாக சாடியுள்ளார். யாழ் மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான சில உறுப்பினர்கள், தமிழ் மக்களுக்கு எதிராக மிகவும் மோசமான செயலை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மற்றும் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளுக்கு…
-
லைக்கா அல்லிராஜா சுபாஷ்கரனுக்கு அடிமேல் அடி!

புலம்பெயர் தொழிலதிபரான அல்லிராஜா சுபாஷ்கரனுக்குச் சொந்தமான ஸ்வர்ணவாஹினி சேனலை மீண்டும் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லைகா மொபைலின் உரிமையாளரான அல்லிராஜா சுபாஷ்கரன், லைகா புரொடக்ஷன்ஸை 2014 இல் நிறுவினார். லைகா ஸ்ரீலங்கா நிறுவனம், சுவர்ணவாஹினி உட்பட, EBC மீடியா நெட்வொர்க் மற்றும் SKY மீடியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், கடந்த தேர்தலில் சுபாஷ்கரன் ஆதரித்த ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், சுபாஷ்கரனுக்குச் சொந்தமான…
-
சிங்கள காடையர்கள் வெறியாட்டம் ; 3000 தமிழர்களை கொலை செய்த கறுப்பு ஜூலை!

இலங்கையில் 1983ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி முதல் 30ம் திகதி வரை அரசாங்கத்தின் உதவியுடன் சிங்கள காடையர்கள் , வாக்காளர் அட்டைகளை பயன்படுத்தி, தமிழர்களின் முகவரிகளை பயன்படுத்தி, 3000 தமிழர்களை கொலை செய்தனர்,5000 வர்த்தகநிலையங்களையும்,18000 வீடுகளையும் சூறையாடினர், எரித்து தீக்கிரையாக்கினர். இந்த சம்பவங்களால் 90,000 முதல் 150,000 தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். இலங்கை அரசாங்கம் நில அபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பு, பொருளாதாரீதியில் ஒதுக்கிவைத்தல், போன்றவற்றைஇன்றும் முன்னெடுப்பதற்கு கறுப்புஜூலை கலவரத்திற்கு காரணமான அதே சிங்கள பௌத்த பெரும்பான்மை கொள்கையே…
-
இலங்கை தமிழர் பிரித்தானிய மேயரானார்!

Ipswich Borough Council மேயராக இலங்கை தமிழர் இளங்கோ இளவழகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இப்ஸ்விச் நகர சபையின் வருடாந்த கூட்டத்தின் போது மேயராக இளங்கோ இளவழகன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இளங்கோ இளவழகன் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் இளங்கோ இளவழகனின் பெயரை மேயர் பதவிக்கு இப்ஸ்விச் நகர சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் முன்மொழிந்தார். பெயரை முன்மொழிந்து பேசிய அவர், புதிய மேயர் தனது பதவிக் காலத்தில் பிரித்தானிய பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் அதிர்ஷ்டத்தை…