-
மன்னாரில் வெள்ள நீர் பள்ளத்தில் விழுந்த உயர்தர மாணவன் உயிரிழப்பு

வெள்ள நீர் பாய்ந்ததால் ஏற்பட்ட 15அடி ஆழமான பள்ளத்தில் தவறுதலாக மூழ்கிய கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரி (18)வயது உயர்தர மாணவன் அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அனர்த்த பிதேசங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
யாழில் பாம்பு தீண்டியபோதும் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இராசயணவியல் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப்…
-
யாழில் காதல் கை கூடாததால் மாணவி உயிர் மாய்ப்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோடை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் காதல் உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக நேற்று (24) உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் வட்டுக்கோடை முல்லை ஆலடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி என தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில் முறிவு ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி குறித்த மாணவி உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத…
-
பகிடிவதை? வவுனியா பல்கலைக்கழக மாணவன் பலி

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மாணவர் உயிரிழந்தபோது,…
-
முல்லைத்தீவில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவனின் மரணம்

உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை அழிக்கப்பட்டும் அது பயனளிக்காமல் நேற்று (29) இரவு உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன்,…
-
வவுனியாவில் கிணற்றில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்டவர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும், வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியாவார். வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில், உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலை முதல் மதியம் 12 மணி வரை வகுப்பு நடைபெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டு உயர்தர…
-
யாழில் மர்ம காச்சலால் மாணவி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த…
-
கொழும்பு பாடசாலை மாணவி விபரீத முடிவால் பலி

கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஹோமாகம, கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த மாணவி சுகயீனம் காரணமாக நீண்ட நாட்களாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். பின்னர் இந்த மாணவி மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில், விடுமுறை எடுத்த நாட்களுக்காக வைத்திய அறிக்கை ஒன்றை வழங்குமாறு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால்…
-
யாழில் பெரும் துயரம்; உயர்தர மாணவி பரிதாப உயிரிழப்பு

இரத்தப் புற்றுநோய் காரணமாக கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி நேற்று மாலை 5:00 மணியளவில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் பூமிகா வயது 19 என்ற என்ற உயர்தர பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
-
பேருந்தில் இருந்து விழுந்த மாணவன்; சாரதி, நடத்துனர் இடைநீக்கம்

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (03) பதிவாகியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோவையும் அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை…