Tag: Student

  • பல்கலைக்கழக மாணவர் மாயம்

    பல்கலைக்கழக மாணவர் மாயம்

    பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள செயற்கை கடலில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று ஸ்நோர்கெலிங் மற்றும் கடற்பரப்பை கண்காணிக்கும் செயல்பாட்டில் ஈடுப்பட்டிருந்தது. இதன்போது, கம்பஹாவின் அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போன மாணவர் அணிந்திருந்தத ஸ்நோர்கெலை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பாளர்கள் மீட்டுள்ளனர். கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு…

  • புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மருத்துவரின் அலட்சியம்; தவித்த மாணவி

    புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மருத்துவரின் அலட்சியம்; தவித்த மாணவி

    முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காரணமாக மாணவி ஒருவர் பெரும் இன்னலுக்கு முகம் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு…

  • தொழில்நுட்பக் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயற்சி; நான்கு மாணவர்கள் கைது

    தொழில்நுட்பக் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயற்சி; நான்கு மாணவர்கள் கைது

    இலங்கையில் குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) பிற்பகல் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஏரியில் குதித்த மாணவி, அருகிலுள்ள ஒரு குழுவினரால் மீட்கப்பட்டு குளியாப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதிய மருந்து கொடுத்த சம்பவம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை…

  • உயிரை மாய்த்துக் கொண்ட கொழும்பு மாணவி தொடர்பில் புதிய தகவல்

    உயிரை மாய்த்துக் கொண்ட கொழும்பு மாணவி தொடர்பில் புதிய தகவல்

    உயிரை மாய்த்துக் கொண்ட கொழும்பு கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பாக, குறித்த மாணவியின் தாயார் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் முன்னிலையில் சாட்சியம் வழங்கி இருந்தார். இதன்போது, தமது மகள் கல்வி கற்று வந்த பாடசாலையின் கணிதபாட ஆசிரியரது துன்புறுத்தல் மற்றும் கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரால் அவமானப்படுத்தப்பட்டமை போன்ற காரணங்களாலேயே உயிரை மாய்த்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். தமது மகள் ஏற்கனவே இரண்டு தடவைகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததாகவும்,…

  • இரு மாணவிகளுடன் காதல் ;யாழ் பல்கலை மாணவன் விபரீத முடிவு

    இரு மாணவிகளுடன் காதல் ;யாழ் பல்கலை மாணவன் விபரீத முடிவு

    இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்தமையால் ஏற்பட்ட தகராறை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக மாணவன், தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இரு மாணவிகளும் இவரது செயற்பாட்டை கண்டு பிடித்த பின்னரே குறித்த மாணவ்ன் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ். பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகள் இருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு, சண்டையில் முடிந்ததால் இவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

  • வழுக்கி விழுந்து சிறுவன் பலி

    வழுக்கி விழுந்து சிறுவன் பலி

    தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது 40 அடி உயரமான வழுக்கும் (கிறீஸ்) மரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததில் 16 வயதான சிறுவன் உயிரிழந்த சம்பவம், பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பிடிகல பொலிஸ் பிரிவின் அமுகொட பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்காக ஒரு குழு வழுக்கும் மரத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் வழுக்கும் மரத்தில் ஏறும்போது விழுந்து எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

  • மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது பாயும் நடவடிக்கை!

    மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது பாயும் நடவடிக்கை!

    நுகேகொடை, கம்பஹா தனியார் வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ஒருவரால் பல பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகேகொடை, கம்பஹா போன்ற இடங்களில் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களை கற்பிக்கும் இந்த தனியார் வகுப்பு ஆசிரியர், தனது வகுப்புகளில் உள்ள மாணவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காணொளி ஒன்றில், மாணவியின் கைத்தொலைபேசியை எடுத்த மாணவனை, மாணவியின் கைகளில்…

  • யாழில் தந்தையின் உழவு இயந்திரத்தினுள் சிக்கி மகன் உயிரிழப்பு

    யாழில் தந்தையின் உழவு இயந்திரத்தினுள் சிக்கி மகன் உயிரிழப்பு

    யாழ்ப்பாணத்தில் தந்தை ஓட்டிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு , சிறுவன் உயிரிழந்துள்ளான் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை தந்தை பின் நோக்கி செலுத்தும் போது , பின் புறமாக நின்ற சிறுவனின் மீது உழவு இயந்திரம் ஏறியதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • வெளிநாட்டில் இருந்து வந்த தந்தையின் ’ஹேண்ட்ஸ் ஃப்ரீ’ மகனுக்கு எமனானது

    வெளிநாட்டில் இருந்து வந்த தந்தையின் ’ஹேண்ட்ஸ் ஃப்ரீ’ மகனுக்கு எமனானது

    வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய தனது தந்தை கொண்டு வந்த ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெட்ஃபோன்களை அணிந்துகொண்டு, சென்ற அவரது மகன் பலியான சம்பவம் அம்பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது. இரண்டு ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெட்ஃபோன்களை அணிந்து கொண்டு தனது தொலைபேசியில் பாடலைக் கேட்டுக்கொண்டே சென்றபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான சேர்க்கை படிவங்களில் கையெழுத்திட இந்த மாணவன் ஞாயிற்றுக்கிழமை (02) மதியம் அம்பலங்கொடையில் கடலோர ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே ரயில் மோதி…

  • வவுனியாவில் மாணவி குளிக்கையில் மறைந்திருந்து காணொளி எடுத்த குடும்பஸ்தர்

    வவுனியாவில் மாணவி குளிக்கையில் மறைந்திருந்து காணொளி எடுத்த குடும்பஸ்தர்

    வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்ததாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஆலயம் ஒன்றின் கட்டுமானப் பணி இடம்பெற்று வரும் நிலையில், குறித்த ஆலயத்தில் மரவேலைகளில் ஈடுபட்ட 35 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது வேலிக்கு அருகில் இருந்து சிறுமியை வீடியோ எடுத்ததாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டையடுத்து…