Tag: Students

  • இலங்கையில் 7 மாணவர்களுக்கு மரணதண்டனை

    இலங்கையில் 7 மாணவர்களுக்கு மரணதண்டனை

    பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள், 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும், 21 பெண்களும் அதில் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தென் மாகாணமே பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துளளார். இது…

  • முல்லைத்தீவில் துயரம்; நால்வர் உயிரிழப்பு

    முல்லைத்தீவில் துயரம்; நால்வர் உயிரிழப்பு

    முல்லைத்தீவில் இரு வெவ்வேறு சம்பங்களில் நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் தாமரைக்குளத்தில் தாமரை பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவரும் அவரோடு சென்ற ஒன்று விட்ட சகோதரனான சிறுவன் ஒருவனுமாக இருவர் உயிரிழந்திருந்தனர். இதேவேளை முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் 10ம் வகுப்பில்; கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் இருவர் கோவில் கேணியின் அருகே செல்பி எடுக்க முற்பட்ட வேளை கேணிக்குள் தவறி விழுந்துள்ளனர். முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற…

  • பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவன் மீது கொடூர தாக்குதல்

    பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவன் மீது கொடூர தாக்குதல்

    ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாட்டில் இன்னும் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தாக்கப்பட்ட மாணவர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு…

  • பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை நிறுத்த உத்தரவிட்ட டிரம்ப்! – வழக்கு பதிவு செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம்…

    பல்கலைக்கழகங்களுக்கு  வழங்கப்பட்ட நிதியை நிறுத்த உத்தரவிட்ட டிரம்ப்! – வழக்கு பதிவு செய்த  ஹார்வர்ட் பல்கலைக்கழகம்…

    அமெரிக்காவின் பல முக்கியப் பல்கலைக்கழகங்களில், காசா போர் மற்றும் பாலஸ்தீன மக்களின் நிலைமைக்கெதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இயல்பாக அமைந்துள்ள கல்வி வளாகங்கள், தற்போது சமூக நீதிக்கான குரல்கள் எழும் போராட்ட மையங்களாக மாறியுள்ளன. இந்த இயக்கம் முதலில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. அங்கு மாணவர்கள் காசாவில் நடைபெறும் இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களை கண்டித்து “sit-in” முறையில் தங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து யேல், பிரின்ஸ்டன், ஹார்வர்ட், ஸ்டான்‌போர்டு, கெலிஃபோர்னியா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு வளாகங்களிலும்…

  • பாணந்துறை கடலில் காணாமல் போன மாணவர்கள்

    பாணந்துறை கடலில் காணாமல் போன மாணவர்கள்

    பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பாணந்துறை கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், அங்கு நீராடிக்கொண்டிருந்த போது, ​​ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர். இந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் இணைந்து…

  • தனியார் பஸ் – லொறி விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயம்

    தனியார் பஸ் – லொறி விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயம்

    ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த லொறி உதவியாளர் உட்பட பாடசாலை மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார…

  • சிங்களப் பாடசாலை ஒன்றில் தமிழ் மாணவனின் காலகளை எரித்த காவாலி மாணவர்கள்

    சிங்களப் பாடசாலை ஒன்றில் தமிழ் மாணவனின் காலகளை எரித்த காவாலி மாணவர்கள்

    நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சிறுவனின் கால்களை ரினர் ஊற்றி சக மாணவர்கள் எரித்துள்ளதாக தெரியவருகிறது. கம்பளை வைத்தியசாலையில் பல நாட்கள் சிகிச்சை பெற்ற குறித்த மாணவன் தற்போது வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகமும் பொலிசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

  • யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள்ளக குழப்பங்கள்; நடவடிக்கைகு தயாராகும் அனுர அரசாங்கம்

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள்ளக குழப்பங்கள்; நடவடிக்கைகு தயாராகும் அனுர அரசாங்கம்

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள்ளக குழப்பங்கள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க போவதில்லை. அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதனிடைளே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க ஆரம்பித்;துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் அண்மையில் இடம்பெற்ற…

  • மலையில் வழி தவறி காணாமல் போன மாணவர்கள் 10 பேர் மீட்பு

    மலையில் வழி தவறி காணாமல் போன மாணவர்கள் 10 பேர் மீட்பு

    கண்டி ஹந்தானை மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் 10 பேர் அடங்கிய குழுவொன்று வியாழக்கிழமை (05) காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கிரிபத்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 16 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் குழுவொன்று புதன்கிழமை (04) காலை பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சரசவிகம பிரதேசத்தில் இருந்து ஹந்தானை மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மலையில் ஏறிக்கொண்டிருந்த போது கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் காரணமாக…

  • வறுமை நிலையிலுள்ள மாணவர்களுக்கு 6,000 ரூபா விசேட கொடுப்பனவு

    வறுமை நிலையிலுள்ள மாணவர்களுக்கு 6,000 ரூபா விசேட கொடுப்பனவு

    வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு 2025 முதல் 6,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க, தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில், உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில்…