-
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தே.மு.தி.க. எந்தப் பக்கம் என்று நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.…
-
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை; தவெக உறுப்பினர் விடுதலைப்புலிகளை கைகாட்டுவது ஏன்?

நடிகர் விஜய் இன் அரசியல் கட்சியான தமிழக வெற்றிகழக உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசியிருந்தமை ஈழத்தமிழர்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 1990 ஆகஸ்ட் 3 இல் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சிங்கள் தரப்பால் அறங்கேற்றியதை மறைத்து விடுதலைப்புலிகள் மீது பழி விழுந்தது. எனினும் விடுதலைப்புலிகள் அவ்வாறான கொடூரத்தை செய்யவில்லை என்பது காத்தான்குடி இஸ்லாமிய மக்களுக்கும் தெரிந்த உண்மை. இந்நிலையில் காத்தான் குடியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை கொன்றுகுவித்ததாக கூறியுள்ளமை ஈழத்தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதேவேளை…
-
எம்.பி கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய்

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கனிமொழிக்கு…
-
திமுக அரசு திட்டம் ; பொறாமையில் எடப்பாடி பழனிசாமி கொந்தளிக்கிறார்

தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத்தோடு போட்டியிடும் வகையில் திமுக அரசு திட்டம் வகுத்து வருவதை பார்த்து பொறாமையில் எடப்பாடி பழனிசாமி கொந்தளிக்கிறார் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிகையில்,அதிமுக ஆட்சியில் 68 கோடியில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை CAGஅறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியது என்றும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த லேப் டாப் முறைகேட்டை அம்பலப்படுத்திய CAG அறிக்கை 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எடப்பாடி…
-
இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்

யாழ். பருத்தித்துறை – இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது. குறித்த உடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் குறித்த உடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த உடலம் இந்தியா – இராமேஸ்வரம் மீனவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை

தமிழகத்தில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் 7 மாதங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி…
-
ஜீவன் தொண்டமான் திருமணத்தில், ரணில், கனிமொழி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்று (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள்…
-
விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. 3 பேர் கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை…
-
தமிழக மூகாமில் இருந்து தாயகம் தப்பி வந்த இலங்கை குடும்பம்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் நாட்டில்…
