-
மூட்டை முடிச்சுக்களுடன் துரத்தப்பட்ட யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பொலிஸ் நிலையம் எட்டு சிவில் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் அந்த நபர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய…
-
பிரிகேடியர் விதுசாவின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் அரசியல்வாதிகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் தந்தை கணபதிப்பிள்ளை கந்தையாவின் (கப்பூது ஐயா) இறுதிச்சடங்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கரவெட்டியில் நடைபெற்றது. இறுதி கிரியையின் போது, முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
-
செம்மணி அணையா விளக்கை உடைத்த விசமிகளுக்கு சாட்டையடி

யாழ்ப்பாணம் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி அப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட அணையா விளக்கு மீள நேற்று மாலை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் இனந்தெரியாதோரால் இடித்தழிக்கப்பட்டிருந்த அணையா விளக்கு இன்று மாலையில் மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி முன்னதாக இடித்தளிக்கப்பட்டிருந்தது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில்; ”அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட…
-
திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் ; சி.வீ.கே. காட்டம்

தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சிகளிடம் அமைப்புக்களிடம் கோரிக்கை முன்வைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு…
-
செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கவுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி நாளைய தினம் வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், குறித்த போராட்டத்தை செம்மணி வளைவு பகுதியில் செய்யவிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எமது…
-
யாழில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞன்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞனை கைது செய்யுமாறு தவிசாளர் பொலிசாரினை கோரியதை அடுத்து இளைஞன் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், “திலீபன் வழியில் வருகிறோம்” என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் நேற்றைய…
-
தியாக தீபம் திலீபனின் நினைவு படத்தை அகற்றி திருக்கோணமலை பொலிஸார் அடாவடி

தியாக தீபம் திலீபனின் நினைவு படம் திருக்கோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருக்கோணமலையில் இடம் பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (19) காலை நினைவுப்படம் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய பொலிஸ்அதிகாரிகளால் குறித்த…
-
கிளிநொச்சியில் முப்பது ஏக்கர் காணிகள் விடுவிப்பு

கடந்த 2009 ஆண்டு முதல் படையினர் வசமிருந்த தனியார்கள் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 7 ஏக்கர் காணிகள் இம்மாதம் 7 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகள் தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள…
-
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின. இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திலீபன் முன்வைத்த கோரிக்கைகள், 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு…
-
மஹிந்தவுக்கு வீடு வழங்க போட்டிபோடும் தமிழரும் ….சீனாவும்

ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அதிரடி அறிவிப்புமகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை நேற்று அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள மகிந்த, தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார். எனினும் மகிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்பில் குடியேற 2 ஆடம்பர வீடுகளை வழங்க நேற்று 2 தொழிலதிபர்கள் முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கமைய,…