-
தமிழர் பகுதியில் முருகனுக்கு இடமில்லை… புத்தருக்கு இடமா; மக்கள் விசனம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு அங்கு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. உகந்தமலையில் நாங்கள் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர்…
-
அகதிகள் வந்து தங்க இந்தியா சத்திரம் அல்ல; இலங்கையரின் மனு நிராகரிப்பு

இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், ஏதிலிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்மொழியாகக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிராக, 2018 ஆம் ஆண்டில் சென்னை மேல் நீதிமன்றம் 7 வருடச் சிறைத்தண்டனையை விதித்தது. குறித்த, தண்டனைக் காலம் நிறைவடைந்ததும், உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன்,…
-
May 18 -உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் … த.வெ.க. தலைவர் விஜய்

இலங்கையில் ராஜபக்ச சிங்கள அரசாங்கம் அரங்கேற்றிய தமிழ் இன படுகொலை நினைவுநாளான முள்ளிவாய்க்கால் தினம் நேற்றையதினம் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களால் கண்னீருடன் நினைவு கூரப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக இன்று உறுதி ஏற்போம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான…
-
கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வேட்பாளர்கள்!

கனடா தேர்தல் – வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தமிழ் கனேடிய வேட்பாளர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது- 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கனடிய பிரதிநிதிகளிற்கும் கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள் 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்கு கனடிய தமிழர் பேரவை தனது…
-
சந்திரசேகரன் குழுவின் யாழ்ப்பாண சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளிவரும்

தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகரன் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (18) நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரவிக்கையில், உள்ளூராட்சி மன்ற…
-
யார் இந்த கருணா..?

கருணா (வினாயகமூர்த்தி முரளிதரன்) மட்டக்களப்பு கிரானை சேர்ந்தவர். 1966,யூன்,22, ல் பிறந்தவர். 1983, ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்.(17, வயதில் இணைந்தவர்) 2003, ல் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கட்டளை தளபதியாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் நியமிக்கப்பட்டவர். தலைவருக்கு நம்பிக்கையான ஒருவராக அவர் அந்த காலத்தில் செயல்பட்டார். 2003, நவம்பர்,27 (கார்த்திகை 27) கருணா தலைமையில் தரவை துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின வணக்க நிகழ்வில் என்றும் இல்லாத ஒரு அசிங்கத்தை கருணா…
-
கனடாவில் இரு தமிழர்கள் மீது கொலை குற்றச்சாட்டுகள் பதிவு

கனடாவின் பிக்ரிங் பகுதியில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதம் தொடக்கத்தில், மார்கம் நகரை சேர்ந்த கோகிலன் பலமுரளி மற்றும் டொரண்டோவின் பிரன்னன் பாலசேகர் ஆகியோர், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளுக்கிடையில் கொலைச் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டனர். மார்ச் 8 ஆம் திகதியில் அவர்கள் இருவரும் கொலை சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், டொரண்டோ பொலிஸார் பிக்ரிங் பகுதியில் விசாரணை…
-
சவேந்திர சில்வா, கருணா அம்மானிற்கு எதிராக பிரிட்டன் தடை

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய. கருணா அம்மான்.ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளதாவது. பிரிட்டன் இலங்கையின்…
-
கனடா நீதி அமைச்சராக யாழ்ப்பாண Gary Anandasangaree!

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரி ஆவார். இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை…
-
கனடாவில் யாழ் யுவதி சுட்டுக் கொலை!

கனடாவின் மார்க்காமில் யாழ்ப்பாண புலம்பெயர் யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 20 வயதுடைய என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இந்த பெண் இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அந்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த பெண்ணுடன் வசித்து வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரிகள் வீட்டைக் காத்துக்கொண்டிருந்த நாயையும் சுட்டுக் கொன்றதாகக்…