-
மகிந்த இடத்தில் 624 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்காலை பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேலும் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வீட்டையும் அதன் சுற்றுப் பகுதியிலும் தேடுதல் நடத்திய போது மூன்று லொறிகளிலிருந்து 624 கிலோ நிறையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரி 56 ரக துப்பாக்கி என ஐந்து துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த…
-
வீடொன்றில் மீட்கப்பட்ட இரு சடலங்கள்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும்…
-
மஹிந்தவை சந்திக்க நெடுந்தூரம் பயணம் செய்த தம்பதி

குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கொழும்பிலிருந்து தங்காலை – கார்ல்டன் இல்லத்திற்கு சென்றிருப்பதை அறிந்ததும், அவர் மீதான தங்கள் பாசத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாக தம்பதியினர் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடலில் ஈடுபட்டனர். அதேநேரம், முன்பள்ளி சிறுவர் பாடசாலையை சேர்ந்த குழுவொன்று அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து,…
-
உயிரிழப்பதற்கு முன் கடலில் மிதந்த பாட்டிலுடன் செல்பி எடுத்த மீனவர்கள்!

மீன்பிடி தொழிலுக்கு சென்ற 6 மீனவர் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தி நோய்வாய்பட்டு 5 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘Devon 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, கடலில்…