-
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை காணி ஒரு துண்டு கூட கிடைக்காது

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்துள்ளார் . பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.…
-
தையிட்டி எங்கள் சொத்து ;யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். “தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை அகற்றுமாறு போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தையிட்டியில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டமை மற்றும் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தமை முதலிய செயல்களுக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
-
தையிட்டி போராட்டம்; பலர் கைது ; வேலன் சுவாமி மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக நேற்று ஞாயிற்று கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு…
-
தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்ட விரோதக் கட்டடம்

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய சட்ட விரோத விகாரை வளாகத்தில் மற்றுமொரு கட்டடம் கட்ட ஏற்பாடு இடம்பெறுகின்றது என்றும், அந்த இடத்தை யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோர் பார்வையிட்டனர் என்றும் கூறப்படுகின்றது. தையிட்டி சட்டவிரோத வளாகத்தில் மற்றுமோர் அத்துமீறிய கட்டடம் அமைக்கப்படுவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து சக உறுப்பினர்கள் சகிதம் சம்பவ இடத்துக்குத் தவிசாளர் நேற்று வியாழக்கிழமை சென்றிருந்தார். பிரதேச சபையின் தவிசாளர்…