-
தையிட்டி விகாரையை இடிப்பது இனவாதமாம்

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை இடிப்பது இனவாதத்தை கட்டியெழுப்பும் ஆகவே தான் அதை இடிக்க வேண்டாமென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எந்தவொரு கோவில் மற்றும் விகாரை இடிக்கப்பட்டாலும் அது கலவரத்தை தூண்டக்ககூடிய விடயமாக மாறும், சிலர் அதை உடைத்ததெறிய வேண்டும் என தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்” எனவும் அவர் கூறினார். இதனிடையே தையிட்டி விகாரை பிரச்சனையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். யாழ்.…
-
கொடி ஏந்தியதால் கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை!

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன் நேற்று முன்தினம் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய குற்றத்திற்காக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வரும் 14-ம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. எம்.பி. தலைமையில் ஒரு குழுவினர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை திஸ்ஸ ராஜமஹா விகாரைக்கு முன் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தது.…