-
ரவிராஜ் ராஜ்கிரன் – வவுனியா இளைஞனின் மரணத்தின் பின்….

ரவிராஜ் ராஜ்கிரன் – ஒரு இளைஞனின் மரணத்தின் பின் அவரால் இரண்டு உயிர்களை காப்பாற்றியமை மானிடவியல் மனிதநேயத்தை எடுத்துக்காட்டுகின்றது. வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கிரன் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கிக் கொண்டார். எந்த முன்னறிவிப்பும் இன்றி அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான அடிபட்ட காயம் காரணமாக அவர் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டார். உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த 8ஆம் தேதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டார். யாழ்ப்பாணத்தில் சிடி…
-
இலங்கையில் கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தளித்த காதலன்

வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு தனது காதலியை அழைத்துச் சென்று, ‘ஐஸ்’ என்ற போதைப்பொருளைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி, பின்னர் தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஒரு பாரதூரமான சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய வெலிவேரிய காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன. 8 ஆம் திகதி இரவு 10.00…
-
மன்னாரில் வெள்ள நீர் பள்ளத்தில் விழுந்த உயர்தர மாணவன் உயிரிழப்பு

வெள்ள நீர் பாய்ந்ததால் ஏற்பட்ட 15அடி ஆழமான பள்ளத்தில் தவறுதலாக மூழ்கிய கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரி (18)வயது உயர்தர மாணவன் அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அனர்த்த பிதேசங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அகதியாக வாழ் விருப்பமில்லை ; ஜேர்மனியில் யாழ் இளைஞர் தற்கொலை

ஜேர்மனியில் யாழ்ப்பாண்ம் – ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா சுகன் வயது 25 என்ற இளைஞன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமி அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி முகாமில் பதிவு செய்து முகாமில் தாங்கவைக்கப்பட்டுள்ளார் . விசாஇன்மை ,வேலைஇன்மை தனிமை ,மொழிப் பிரச்சனை நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரத்திக்குள்ளாகி அடிக்கடி குடும்பத்தினருக்கு தான் மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என்று கூறி…
-
பாலியல் துஷ்பிரயோகம்; அமெரிக்காவில் இலங்கையை பேராசிரியர் கைது!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமித் குணசேகர என்ற அமெரிக்காவின் ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் செயலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 12 ஆம் திகதியன்று டெட்ரோய்டில் அவர் கைது செய்யப்பட்டார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்ற வரலாறு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற சுமித் குணசேகர,தாம் சிறுவர்…
-
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திமணமாகி ஒரு வருடத்தில் துயரம்

லண்டனில் இடம் பெற்ற கத்திக்குத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு வருடமான நிலையில் இத துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும்…
-
கொழும்பில் திடீரென இடிந்து விழுந்த 5 வீடுகள்

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில், அங்கு வசித்திருந்த குடும்பங்கள் முன்கூட்டியே இடைத் தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் மட்டுமே முழுமையாக சேதமடைந்துள்ளன.
-
முல்லைத்தீவில் மாயமான 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. காணாமல்போனவரின் சடலம் புதுமாத்தளன் பகுதியில் மீட்கப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் பணியாற்றிய ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காணாமல் போன ஏனைய நான்கு பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
-
யாழில் ஓட ஓட இளைஞன் வெட்டிக்கொலை; சிறையில் போட்ட திட்டம்; ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வானில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்துக்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. நீண்ட…
