-
யாழில் அம்புலன்ஸ் வாகனத்தில் நடந்த கூத்து; பொதுமகனால் தலைதெறிக்க ஓட்டம்

இலங்கை சுகாதார சேவையைச் சேர்ந்த வாகனம் ஒன்றில் வந்த இருவர் யாழ் அல்லைப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வாகனத்தை ஓரமாக மர நிழலில் நிறுத்திவிட்டு ஆற அமர ஆத்தல் எடுத்த காட்சி. யாழ் அல்லைப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வாகனத்தை ஓரமாக மர நிழலில் நிறுத்திவிட்டு ஆற அமர bear அருந்தீய நிலையில் பொதுமனிடம் சிக்கியுள்ளனர். இதன்போது அவர்கள் அனுராதபுரத்தில் இருந்து வந்தமை தெரியவந்துள்ளது. அப்புலன்ஸ் வாகனத்தில் எப்படி நீங்கள் மது அஎடுத்து வருவீர்கள் என பொது மகன் கேள்வி…
-
யாழில் உறவினர் வீட்டில் உயிர் மாய்த்த நபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலும் தெரியவருகையில், அவர் நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தவர்களின் அறிவிப்பின் பேரில் அச்சுவேலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அவரது சடலம் மீதான…
-
யாழ் போதனாவில் மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி (வயது 25) என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
-
சுவிஸ்ஸலாந்து நாட்டில் அருச்சுனா இராமநாதன் அரசியல் புகலிடம்

ஜநா அமர்விற்கு சென்றுள்ள நிலையில் சுவிஸ்ஸலாந்து நாட்டில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதான குற்றச்சாட்டை சுயேட்சைக்குழு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மறுதலித்துள்ளார். தூன் நாடு திரும்புவேன் போலிச் செய்திகளை நம்ப வேண்டாமென தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அருச்சுனா இராமநாதன் சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பதாக சமூக ஊடகங்களில் இன்று முழுநாளும் செய்திகள் வெளிவந்திருந்தன. அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை நாடு திரும்புவேன் என அருச்சுனா இராமநாதன் கருத்து பகிர்ந்துள்ளார். சுவிஸ்லாந்தில் ஜெனிவாவை…
-
யாழில் புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் தமிழ் சட்டத்தரணிகள்

யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் தமிழ் சட்டத்தரணிகள் கைது வேட்டை யாழில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கைதினை மடைமாற்ற நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர். ஆவர்களிற்கு ஆதரவாக வடக்கின் ஏனைய மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நில மோசடி…
-
கொழும்பில் போதைக்கு அடிமையான கணவனால் இளம் பெண் எரித்துக்கொலை

கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர், தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர் பலமுறை பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் ரிக்ரொக் சமூக ஊடக பிரபலமான 29 வயதுடைய இளம் தாயாவார். பெண்ணின் கணவர் வீட்டின் கூரையை அகற்றி, வீட்டிற்குள் நுழைந்து, பெட்ரோல் போத்தலைக் கொண்டு…
-
யாழ்ப்பாணத்தில் மிக்ஸருக்காக இடம்பெற்ற கொலை

யாழ்ப்பாணத்தில் பல்பொருள் வாணிப நிலையத்தில் நிறை மது போதையில் சென்ற இருவர் உரிமையாளருடன் முரண்பட்டு , கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கை சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள பல்பொருள் வாணிப நிலையம் ஒன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை…
-
யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவி உயிரை மாய்க்க முயற்சி

யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் இரண்டாம் மாடியில் இருந்து குதித்த நிலையில், சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடுவில் மகளீர் கல்லூரியில் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலையின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார். அந்நிலையில் , நேற்றைய தினம் மாணவி விடுதியின் கட்டடம் ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் , மீட்கப்பட்டு யாழ் ,…
-
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு வைத்தியம் பார்க்கும் அருச்சுனா

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த பெற்றோரும் தனது பிள்ளை ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதை விரும்பமாட்டார்கள். நாங்கள் பின்பற்றுவது இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாம் மதங்களாகும், இவற்றில் இதற்கு இடமில்லை. யாருக்காவது ஏதும் பிரச்சினை என்றால் வைத்திய முறையில் தீர்வை வழங்குவோம். நாட்டை வீணாக்க முடியாது. யாருடைய பிள்ளையும் நாசமாக விடமாட்டேன். இந்த நாட்டை…
-
முல்லைத்தீவில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவனின் மரணம்

உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை அழிக்கப்பட்டும் அது பயனளிக்காமல் நேற்று (29) இரவு உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன்,…