Tag: TopNews

  • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; வதந்தி பரப்பியவர்களுக்கு நேர்ந்த கதி

    விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; வதந்தி பரப்பியவர்களுக்கு நேர்ந்த கதி

    தமிழகத்தின் கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் (வயது 38), தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (36), தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த…

  • மருத்துவ தவறால் கை இழந்த சிறுமி; யாழ் போதனா வைத்தியசாலை தாதிக்கு தடை

    மருத்துவ தவறால் கை இழந்த சிறுமி; யாழ் போதனா வைத்தியசாலை தாதிக்கு தடை

    யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நாட்டைவிட்டு வெளியேற வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் கனோலா ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் சிறுமியின் மணிக்கட்டு பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் வைத்தியத்…

  • யாழில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞன்

    யாழில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞன்

    யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞனை கைது செய்யுமாறு தவிசாளர் பொலிசாரினை கோரியதை அடுத்து இளைஞன் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், “திலீபன் வழியில் வருகிறோம்” என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் நேற்றைய…

  • மகிந்த இடத்தில் 624 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள்

    மகிந்த இடத்தில் 624 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள்

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்காலை பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேலும் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வீட்டையும் அதன் சுற்றுப் பகுதியிலும் தேடுதல் நடத்திய போது மூன்று லொறிகளிலிருந்து 624 கிலோ நிறையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரி 56 ரக துப்பாக்கி என ஐந்து துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த…

  • விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: இலங்கைப் பெண்ணை விசாரிக்க உத்தரவு

    விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: இலங்கைப் பெண்ணை விசாரிக்க உத்தரவு

    தற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதென கூறப்படும் பணச்சலவை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு முகவரக நீதிமன்றம் அமுலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது. மேரி பிரான்சிஸ்கா லெட்சுமணன் என்ற குறித்த பெண் தமிழ்நாட்டின் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பை கொண்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகவரத்தினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். இது…

  • தியாக தீபம் திலீபனின் நினைவு படத்தை அகற்றி திருக்கோணமலை பொலிஸார் அடாவடி

    தியாக தீபம் திலீபனின் நினைவு படத்தை அகற்றி திருக்கோணமலை பொலிஸார் அடாவடி

    தியாக தீபம் திலீபனின் நினைவு படம் திருக்கோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருக்கோணமலையில் இடம் பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (19) காலை நினைவுப்படம் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய பொலிஸ்அதிகாரிகளால் குறித்த…

  • தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர்; தடுத்து நிறுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி

    தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர்; தடுத்து நிறுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி

    யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது. அந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்று இருந்தனர்.…

  • யாழில் தனியார் விடுதியில் அரங்கேறிய சம்பவம்; அச்சத்தில் மக்கள்

    யாழில் தனியார் விடுதியில் அரங்கேறிய சம்பவம்; அச்சத்தில் மக்கள்

    யாழ்ப்பாணம் நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். நெடுந்தீவு மதுபானசாலையில்   இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர் குழு, மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டு பேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…

  • மனைவிக்கு நடந்தது என்ன? நாடகமாடிய கணவன்; காட்டிக்கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

    மனைவிக்கு நடந்தது என்ன? நாடகமாடிய கணவன்; காட்டிக்கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

    தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியில் படுக்கையில் இருக்கும்போது உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனையில் கொலை என தெரியவந்துள்ளது. கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ சேவை அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பெண்ணொருவர் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஆவார். அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் நேற்று திங்கட்கிழமை (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது மனைவி…

  • தமிழ் இளைஞர்கள் படுகொலை; வசந்த கரன்னாகொட கழுத்தின் மேல் தொங்கும் கத்தி

    தமிழ் இளைஞர்கள் படுகொலை;  வசந்த கரன்னாகொட கழுத்தின் மேல் தொங்கும் கத்தி

    கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான கோத்தபாய ஆட்சிக்கால சதி முறியடிக்கப்பட்டள்ளது. முன்னதாக இலங்கை சட்டமா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி காணாமல் போன இளைஞர்களின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (15) அனுமதி அளித்துள்ளது. உண்மைகளை நீண்ட நேரம் பரிசீலித்த பிறகு, மேல்முறையீட்டு மனுவை…