Tag: Trincomalee

  • விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

    விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

    கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார். கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது இப்புனுள்ளா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். ​மீன் வியாபாரியான இவர், இன்றைய தினம் கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார். அதன் போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே…

  • திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா

    திருகோணமலை – வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா வெருகல் கலாசார மண்டபத்தில் இன்று (19) காலை நடைபெற்றது. இதன்போது மாவீரர் பெற்றோர் மேள தாளங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பின்னர் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல் பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் தமிழ் தேசிய…

  • இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது; புத்தர் சிலை தொடர்பில் ஜனாதிபதி அனுர

    இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது; புத்தர் சிலை தொடர்பில் ஜனாதிபதி அனுர

    திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகிறார்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் இல்லை. பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்…

  • சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகளை அடக்குங்கள்; எம்.பி மனோகணேசன் ஆவேசம்

    சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகளை அடக்குங்கள்; எம்.பி மனோகணேசன் ஆவேசம்

    சட்டத்தை கையில் எடுத்து, மத தலங்களை அமைக்க அல்லது இடிக்க, எவருக்கும் உரிமை இல்லை. திருகோணமலையில் சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகள் தடுக்க பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். திருகோணமலை பதட்ட நிலை தொடர்பில், தற்போது இந்திய பயணத்தில் இருக்கும் மனோ கணேசன் எம்பி தனது எக்ஸ்-தள செய்தியில் கூறியுள்ளதாவது; ஒருங்கிணைந்த இலங்கையின் அடிப்படை, நமது நாட்டு இன, மத, மொழி பன்மைத்துவம் ஆகும். எந்த மத தலைவருக்கும்,…

  • திருகோணமலையில் அமைதியின்மை!

    திருகோணமலையில் அமைதியின்மை!

    திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை பொலிஸார் அகற்ற நடவடிக்கை எடுத்ததையடுத்து, நேற்று இரவு அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை, 1951 ஆம் ஆண்டு பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பௌத்த விகாரையாகும். அங்கு நடத்தப்பட்டு வந்த ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிவர்தன தஹம் பாடசாலை சுனாமி அனர்த்தத்தால் அழிவடைந்ததையடுத்து,…

  • திருமலை புத்தரால் இராமலிங்கம் சந்திரசேகர் கொதிப்பு

    திருமலை  புத்தரால்  இராமலிங்கம் சந்திரசேகர் கொதிப்பு

    நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை கோபுரத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்…

  • திருகோணமலையில் கோர விபத்து

    திருகோணமலையில் கோர விபத்து

    திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (08)காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்…

  • திருகோணமலையில் குழு மோதலில் இளைஞன் கொலை

    திருகோணமலையில் குழு மோதலில் இளைஞன் கொலை

    திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டு விட்டு அங்கிருந்து வெளியேறிய வேளை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, மடத்தடி – கிருஷ்ணர் ஒழுங்கையைச் சேர்ந்த டி.எச். வினோத் (வயது 33) என்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விருந்து நடைபெற்ற ஹோட்டலில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.…

  • சம்பூரில் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டுமா? இல்லையா?

    சம்பூரில் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டுமா? இல்லையா?

    திருகோணமலை சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இப்பகுதியில் முன்னர் மயானம் ஏதும் இருந்ததா? என்பது பற்றி தொல்பொருள் திணைக்களம் அறிக்கையை முன்வைக்க வேண்டும் அவ் அறிக்கைகளின் படி அகழ்வு பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி.தஸ்னீம் பெளசான், புதன்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார். கடந்த 19 ந் திகதி மிதி வெடி…

  • திருகோணமலை மாநகர சபையின் மேயராக சுப்ரா தெரிவு

    திருகோணமலை மாநகர சபையின் மேயராக சுப்ரா தெரிவு

    திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக…