-
ரில்வின் சில்வா பிரித்தானியா வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தயில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.…
-
அதிநவீன விமானத்திட்டத்தில் இந்தியா? ஜப்பானின் வரவேற்பு அறிக்கை!

உலக நாடுகள் தங்களின் பாதுகாப்புத் துறையை மேம்படுத்த பல்வேறு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பன்னாட்டு ராணுவ முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் GCAP முக்கிய இடம் பெற்றுள்ளது.இத்திட்டத்தில் தற்போது ஜப்பான், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் அரசு இந்தியாவை GCAP திட்டத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளது, என்பது பாதுகாப்புத் துறையில் புதிய மாற்றத்திற்கான வழியைத் திறக்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.…