Tag: Vavuniya

  • வவுனியாவில் தொலைபேசியால் இடம்பெற்ற கொலை

    வவுனியாவில் தொலைபேசியால் இடம்பெற்ற கொலை

    இளைஞன் ஒருவருடனான தொலைபேசி உரையாடல் வாக்கு வாதமாக முற்றியதை அடுத்து, கும்பல் ஒன்று குறித்த இளைஞனை தேடி சென்று படுகொலை செய்துள்ளது. வவுனியாவில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் தவசி குளத்தை சேர்ந்த 19 வயதான இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுக்கும் பிறிதொரு இளைஞனுக்கும் நேற்றைய தினம் தொலைபேசியில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அதனை அடுத்து சிறிது நேரத்தில் வாக்குவாதப்பட்ட இளைஞன் தன்னுடன் மேலும் மூவரை அழைத்து வந்து குறித்த இளைஞன் மீது கூரிய…

  • வவுனியாவில் பெண் கழுத்தறுத்து கொலை; கணவன் காயங்களுடன் மீட்பு

    வவுனியாவில் பெண் கழுத்தறுத்து கொலை; கணவன் காயங்களுடன் மீட்பு

    வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (19) அதிகாலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் கருவேப்பன்குளம் பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரால் இந்தக் கொலை செய்யப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மனைவியை கொலை செய்த பின்னர் கணவரும் கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும், காயங்களுடன்…

  • வவுனியாவில் பற்றி எரிந்த சிங்கர் க்ஷோ ரூம்

    வவுனியாவில் பற்றி எரிந்த சிங்கர் க்ஷோ ரூம்

    வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா – ஹொரவபொத்தானை வீதியில் அமைத்துள்ள சிங்கர் காட்சியறையிலையே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பெருமளவானோரின் பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் காட்சியறையில் காணப்பட்ட பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் என கோடிக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து…

  • பிள்ளையின் மருத்துவ தேவைக்கு நிதி சேகரிப்பு ; யாழில் சுற்றியவர்கள் விரட்டியடிப்பு

    பிள்ளையின் மருத்துவ தேவைக்கு நிதி சேகரிப்பு ; யாழில் சுற்றியவர்கள் விரட்டியடிப்பு

    யாழ்ப்பாணத்தில், தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமது பிள்ளைக்கு உடலில் பாதிப்பு ,சத்திர சிகிச்சை மேற்கொள்ள நிதி தேவை என கூறி முல்லைத்தீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில்…

  • வவுனியாவில் பெண் கழுத்து அறுத்து கொலை; கணவர் தலைமறைவு

    வவுனியாவில் பெண் கழுத்து அறுத்து கொலை; கணவர் தலைமறைவு

    வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இ.சிந்துஜா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் கழுத்துப் பகுதியில்…

  • வவுனியாவில் பௌத்ததுறவிக்கு சிலை ; மாநகரசபையில் கோரிக்கை

    வவுனியாவில் பௌத்ததுறவிக்கு சிலை ; மாநகரசபையில் கோரிக்கை

    மரணித்த பௌத்ததுறவி ஒருவருக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம் வழங்க வவுனியா மாநகரசபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை உறுப்பினர் முகமட் முனவ்வர் வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றை அமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியுள்ளார். எனினும் துணை முதல்வர் கார்த்தீபன், அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான…

  • வவுனியா இளைஞர்ளை தேடும் பொலிஸ்

    வவுனியா இளைஞர்ளை தேடும் பொலிஸ்

    கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் மூவர் மீது சந்தேகம் நிலவுவதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். T-56 துப்பாக்கியுடன் பயணித்த வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கிரிபத்கொடை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்தனர். இந்நிலையில் , பயங்கரவாத எதிர்ப்பு மற்றும்…

  • வவுனியாவில் 14 கோடி ரூபாய் மோசடி செய்த ஜோடி

    வவுனியாவில் 14 கோடி ரூபாய் மோசடி செய்த ஜோடி

    பெறப்பட்ட பணத்தை திருப்பித் தராமல் வெற்று காசோலைகளை வழங்கி பொதுமக்களிடம் 140 மில்லியன் ரூபாயை மோசடி செய்த திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், வவுனியா பொது மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். வணிக நோக்கங்களுக்காகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுத் துறையின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு 2 க்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து…

  • வவுனியாவில் கிணற்றில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

    வவுனியாவில் கிணற்றில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

    வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்டவர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும், வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியாவார். வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில், உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலை முதல் மதியம் 12 மணி வரை வகுப்பு நடைபெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டு உயர்தர…

  • யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி நபர் பலி

    யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி நபர் பலி

    வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (16) இரவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவுநேரை தபால் ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.