-
தாயாகும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை

ரஷ்யாவின் சில பகுதிகளில், பாடசாலை மாணவியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைந்துவருகிறது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. ரஷ்யா — உக்ரைன் போரும், மக்கள்…
-
எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் ….ஒரு நாளும் சரணடைய மாட்டோம்

ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லாஹ் அலி காமெய்னி இன்று ஈரான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். குறித்த உரையில் அமெரிக்க ஜனாதிபதி சொல்வது போன்று நாங்கள் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் என்றும் எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் என்றும் தெரிவித்துள்ளார். அத்தோடு மீண்டும் இஸ்ரேல் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாமும் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ள காமெய்னி உலகின் எந்த நாடு தங்கள் மேல் தாக்குதல் நடத்தினாலும் நாமும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.…
-
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்; திருப்பிவிடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமாங்கள்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சரியான வழித்தடங்களை CAASL…
-
தெஹ்ரான் மக்களை எச்சரிக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேல் மீதான தாக்குதல்களிற்காக தெஹ்ரான்மக்கள் கடும் விலையை செலுத்தும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். சமூக ஊடகத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் கட்ஸ் ஈரானின் ஆன்மீக தலைவரை இஸ்ரேலின் பொதுமக்களின் வீடுகள் முன்பாக தாக்குதல் நடத்தும் கோழை என குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை காலை இஸ்ரேலின் டெல்அவியையும் வடபகுதி துறைமுக நகரான ஹைபாவையும் இலக்குவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஈரான் இஸ்ரேலிற்கும் இடையில் நான்காவது நாளாக தொடரும்…
-
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில்…
-
மூடீஸ் மதிப்பீடு: இந்தியா–பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் யாருக்கு அதிக பாதிப்பு?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரண்டு அணுஆயுத சக்திகளை கொண்ட நாடுகள் இடையே, காலம்காலமாக நிலவும் எல்லைப் பிரச்சனைகள், இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வருகிறது. சமீபத்தில், பாக்லிஹார் அணை, நீர்தடை பிரச்சனைகள் மற்றும் எல்லைத் தாக்குதல்கள் ஆகியவை இந்த உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலைமையில், அமெரிக்காவின் மூடீஸ் எனும் உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம், இந்த இரு நாடுகளுக்கு இடையே போர் வெடித்தால் ஏற்படக்கூடிய பொருளாதார விளைவுகளை விவரிக்கும் ஒரு முக்கியமான அறிக்கையை…
-
35 வருடங்களின் பின் யாழில் முன்னெடுக்கப்படும் சேவை!

35 வருடங்களின் பின் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர். கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி வரை இன்றையதினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக…
-
கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவன கிடங்கில் – ரஷ்யா அதிரடி தாக்குதல் !

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தற்போது மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. பிப்ரவரி 2022-ல் தொடங்கிய இந்த போர், பல்வேறு பகுதிகளில் பலத்த தாக்குதல்கள், உயிரிழப்புகள் மற்றும் அகதிகளைக் கொண்டுள்ளது. போரை நிறுத்த முயற்சிகள்: போரை நிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்நடவடிக்கையாக, 2022 மார்ச் மாதம், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை பிரெஸ்ட் பகுதியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எட்டப்படவில்லை. பிணைக் கைதிகள் விடுவிப்பு: போர் நிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரஷ்யா…
-
16 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி வந்த தாய் உயிரிழப்பு

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தின் 3000ஆவது நாளான நேற்று (24) தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார். இவரின் மகன் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டார். இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடி வந்த தயார் ஆவார்
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை.. 2 பேர் பலி!

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த ஆண்டு 2023ல் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடித்து வன்முறைக்கு இரையானது மணிப்பூர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில்…