-
யாழ்ப்பாணத்தில் பலத்த மழை எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கிற பட்சத்தில் அனைத்து பிரதேச செயலாளர்களும், அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாகச் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. யாழ். மாவட்டத்திற்குரிய தீவகக் கடல்…
-
மிகப் பலத்த மழை ; இலங்கை 24 மணி நேர எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். இத் தொகுதியானது தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, நாளை (09) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் இலங்கையின்…
-
கட்டுநாயக்க வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது. விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து பயணித்த UL-226 விமானமும் சீனாவிலிருந்து பயணித்த UL-881 விமானமும் இந்தியாவின் பெங்களூரிலிருந்து பயணித்த…
-
பெரும் சோகத்தில் அம்பாறை ; நால்வர் உயிரிழப்பு; தேடும் பணி தொடர்கிறது

அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாம்ல்போனோரை தேடும் பணியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக்…
-
தரையிறங்க வந்த 06 விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன!

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (26) இரவு பெய்த கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 06 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, இந்தியா மற்றும் மாலே, மாலத்தீவில் இருந்து விமானங்களும், அபுதாபியில் இருந்து வந்த எதிஹாட் ஏர்லைன்ஸ் விமானமும் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. மேலும், ஜப்பானின் நரிடா, டுபாய் மற்றும் இந்தியாவின் சென்னை…
-
பல பிரதேசங்களுக்கு வௌ்ள அபாயம்

நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல இடங்களில் இன்று (24) காலை கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நில்வலா கங்கையின் ஒரு பகுதியில் சிறு அளவில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளது. இன்று (24) கணிசமான மழைவீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய தற்போது பாகொட, கொடபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்திரலிய,…
-
திருப்பதியில் கொட்டித் தீர்த்த கனமழை!

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திராவில் கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி மலைப் பாதையில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், ஸ்ரீவாரி மெட்டு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி செல்லும் மலைப்பாதையில் இரண்டு இடங்களில் பாறை சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…
-
கொட்டித்தீர்த்த மழை; வெள்ளக்காடான அம்பாறை !

அம்பாறையில் பலத்த மழையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு, சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய வானிலையினால் மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முதல் இன்று திங்கட்கிழமை (14)…
-
டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து மூவர் உயிரிழப்பு

டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளதுடன் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கொட்டித்தீர்க்கும் மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக…
-
யாழ்ப்பாணத்தில் பனை விழுந்து சிறுவன் காயம்

யாழ்ப்பாணத்தில் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக குடிசை ஒன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளான். காரைநகர் களபூமி பகுதியில் நேற்று திங்கட்கிழமை (24) மாலை மினி சூறாவளி வீசியதில் , குடிசை ஒன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்துள்ளது. அதன் போது குடிசையில் இருந்த சிறுவன் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த குடிசை வீட்டில் நால்வர் கொண்ட குடும்பம் வசித்து வந்ததாகவும் , குடிசை…