-
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் 111 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகத்திற்கும் உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம் செய்து தாலி கட்டாதவர்கள் உள்ளிட்ட 111 ஜோடிகளுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட துரை தம்பதியினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது அரைப்பவுண் தாலி, கூறை சேலை மற்றும் இதர செலவுகளையும் குறித்த சிங்கப்பூர் தம்பதிகள் வழங்கி குருமார்களின்…
-
வரதட்சணை கொடுமை: புதுமணப்பெண்கள் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார்…
-
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் ரவி மோகன்

மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவிமோகனும் கெனிஷாவும் கலந்துகொண்டார். இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவிய நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். அவர் ஒரு பெண்ணோடு வந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். இருவரும் ஜோடியாக மேட்சிங் மேட்சிங் உடையணிந்து அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. அந்த பெண் யார் என கேள்வி எழுந்து வந்தது. அவர்…
-
தொழிலதிபரின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.912 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின்போது பல்வேறு ஆவணங்களும்,மின்னிலக்க முறையில் இருந்த தகவல்களும் திரட்டப்பட்டன. கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, அதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளின் ஆவணங்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டாள் ஆறுமுகம் பெயரில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு…
-
உணவுப் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்ட திருமணம்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாகத் திருமணம் ஒன்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மணமகனின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டி, மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், மணமகன் தரப்பு திருமணத்தைத் தொடர மறுத்துவிட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, மணமகளின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார்…
-
திருமணம் எப்போது? ராகுலை கேள்வி கணைகளால் துளைத்த மாணவிகள்

இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்துள்ள ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளாகவும் சரி, நடந்துமுடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சரி அவர் எதிர்கொண்ட முக்கிய கேள்வி திருமணம் எப்போது என்பதே. ராகுல் சில தினங்கள் முன் ஜம்மு – காஷ்மீரில் மாணவிகள் சிலருடன் கலந்துரையாடினார். அதன்போது மாணவிகளில் ஒருவர் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்’ என்று ராகுலிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “கடந்த 30 ஆண்டுகளாக இந்த கேள்வியை நான்…
-
டாட்டூவால் வெடித்த சர்ச்சை; வவுனியா யுவதியை தூக்கி எறிந்த சுவிஸ் மாப்பிள்ளை!

திருமணம் முடித்து சுவிஸ்லாந்து செல்ல முற்பட்ட இளம் பெண் ஒருவரை அவரது கணவன் விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் 26 வயதான வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் முல்லைத்தீவை சொந்த இடமாகவும் கொண்ட இளைஞன் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். திருமணம் முடிப்பதற்கு முன் குறித்த இளம் பெண் பியூட்டிபார்லர் ஒன்றில் வேலை செய்து வந்ததாகத் தெரியவருகின்றது.குறித்த இளம் பெண்ணின் மார்பின் மேற் பகுதியில் V என்ற ஆங்கில எழுத்து…
-
20 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன்!

இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னனை பொலிஸார் கைது செய்தனர். மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் வசித்து வரும் 38 வயது விவாகரத்தான பெண் ஆன்லைன் திருமண தகவல் தளம் வழியாக திருமணத்துக்கு வரன் தேடிவந்தார். அவருக்கு கல்யாண் பகுதியை சேர்ந்த பெரோஸ் சேக் (வயது43) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது பெரோஸ் சேக் தான் விமானியாக பணிபுரிந்து வருவதாகவும், மனைவி இறந்துவிட்டதால் மகள், அத்தையுடன் கத்தாரில் வசித்து…
-
திருமண விளம்பரத்தால் ஏமாந்த பெண்கள்!

ஆங்கில நாளிதழ்களில் திருமண விளம்பரமொன்றை வெளியிட்டு பண மோசடி செய்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது . சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்ட நபரொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர் இந்த மோசடிக்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், ரவுட்டர் மற்றும் மடிக்கணினி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற 28 வயதுடைய ஒரே மகனின்…
-
தனியா சுற்றித்திரிந்த பிரேம்ஜிக்கு திருமணம் முடிந்தது

நடிகை பிரேம்ஜி இன் திருமணம் மிக விமரிசையாக இடம்பெற்ற நிலையில் பல்லரும் திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவராக வலம் வருகிறார். சென்னை 28 மற்றும் அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பிரேம்ஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சில படங்களுக்கு இசை அமைத்து பாடல்களும் பாடியுள்ளார்.சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நகைச்சுவை கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து…