-
பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12 ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு…
-
பெண் கைதியால் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை; பொலிஸார் ஷாக்

கல்கிசை, பிரிவேனா வீதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 பணம் மற்றும் 30 போலி எண் தகடுகளை கல்கிசை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு மின்னணு தராசு, இரண்டு தங்க நெக்லஸ்கள், ஒரு தங்க வளையல், ஒரு…
-
யாழ் நீதிமன்றத்தில் பொலிஸ் கன்னத்தில் செருப்பால் அடித்த பெண்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது குழந்தையை, அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நீதிமன்றக் கட்டளையினால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கி மோதுதலில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ்…
-
யாழில் மகள் மூட்டிய நெருப்பில் தாய் பலி

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில்…
-
மட்டக்களப்பில் துயரம்; மின் வேலியால் பறிபோன உயிர்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துர்யரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். தமிழ்ச்செல்வி செல்வகுமார் மற்றும் உயிரிழந்தவரின் மனைவியான…
-
கிண்ணியா கண்டல் தாவரக் களப்பில் துர்நாற்றம்; ஆராய சென்றவர்களுக்கு ஷாக்!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, பெண் ஒருவரின் சடலம் இன்று (12) கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா, கிரான் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கிண்ணியா கிரான் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த ஜனவரி 8ஆம் திகதி பைசல் நகர் பகுதியில் உள்ள தனது பிள்ளைகளின் வீட்டுக்குச் செல்வதற்காக ஆற்றைக் கடந்து சென்றுள்ளார். அதன் பின்னர்…
-
யாழ் புன்னாலைக்கட்டுவனில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயல்வீட்டுக்காரர்களுக்கு இடையே முரண்பாடு நிலவியுள்ளது. வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலடியில் நின்று பியர் அருந்திய போது, இரண்டு குடும்பஸ்தர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனது கணவரை தாக்கியதாக குறிப்பிட்டு, அயல்வீட்டு பெண் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அயல்வீட்டுக்காரரான 36 வயதானவர் காயமடைந்தார். அவரது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் காயமடைந்தார். அது ஆபத்தான காயமில்லையென பொலிசார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்கானவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
-
இலங்கையில் பயங்கரம் ; 84 வயதான கணவனின் தாக்குதலில் 79 வயது மனைவி பலி

அகலவத்தை, தெல்பாவத்த பகுதியில் நேற்று (1) காலை கணவனின் தாக்குதலில் அவரது மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தெல்பாவத்த, மககம பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் என குறிப்பிடப்படுகின்றது. குடும்பத் தகராறு காரணமாக, கணவர் கதவு தாழ்ப்பாளால் தாக்கியதில் இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உயிரிழந்த வயேதிப பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக 84 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அகலவத்தை…
-
புத்தாண்டு தினத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை!

புத்தாண்டு தினத்தில் கேகாலை பகுதியில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
யாழ்ப்பாணத்தை அதிரவைத்த போதைப்பொருள் ராணி

யாழில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களைப் பார்த்தால் யாருக்கும் சந்தேகம் வராது; அந்த அளவிற்கு மிகவும் அப்பாவியாகத் தோற்றமளிப்பார்கள். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் இந்தச் சட்டவிரோதச் செயல்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். பொம்மைவெளி பகுதியில் வாழும் ‘ஜீவிதா’ இவரைப் பற்றிய புகார்கள் இருந்தாலும், உள்ளூர் போலீசாருக்குச் சரியாக மாமூல் கொடுத்து வந்ததால், பொலிஸ் பிடியில் சிக்காமல் ஒரு அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். ஆனால், கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி எதிர்பாராத விதமாக CID அதிகாரிகள் ஜீவிதாவைத்…