-
தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங் ஜே வான் (Myang Jae Wan) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக 8 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டேஜியானைச் சேர்ந்த மையாங் ஜே வான் (வயது 48) என்ற ஆசிரியை, கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் வைத்து 8 வயது சிறுமியைக்…
-
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு; கடும் சினத்தில் டிரம்ப்

இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான…
-
ஸ்பெய்னில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் நால்வர் பலி

ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரின் உடல்கள் புதன்கிழமை (08) அதிகாலை கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக மாட்ரிட்டின் அவசர சேவைகள் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. ஸ்பெயினின் செய்திச் சேவையின் தகவலின்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மாலி, கினியா மற்றும் எக்குவாடோர் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். அனர்த்தத்தில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர்…
-
மிரளவைக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு

டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் நடத்தி வருகின்றார். அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் (01) மதியம் அவரது சொத்து மதிப்பு 500 பில்லியன் டொலர்களை கடந்தது. சிறிது நேரம் கழித்து 499 பில்லியன் டொலராக சற்று இறக்கம் கண்டது.…
-
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் உலுக்கிய நிலநடுக்கம்; 600க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 11.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள்…
-
திவ்யா தேஷ்முக் வெற்றிக்கு பங்காற்றிய வாழைப்பழம்!

ஜார்ஜியாவில் திங்கட்கிழமை (28) நடந்த உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கேனெரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதி 19 வயது நிரம்பிய திவ்யா தேஷ்முக் வென்று செஸ் உலககோப்பையை வென்றார். இந்நிலையில் தான் அவர் தனது வாழைப்பழ சென்டிமென்ட்டை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. ஜார்ஜியாவில் மகளிருக்கான உலக கோப்பை செஸ் தொடர் கடந்த 4ம் திகதி தொடங்கியது. இதில் 46 நாடுகளை சேரந்த 107…
-
தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் ; 22 பேர் பலி 63 பேர் காயம்

சிரியா – டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church Damascus) தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று(22) இடம் பெற்ற ஞாயிறு ஆராதனையின் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரையிலும் எந்தவொரு குழுவும் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போர் பதற்றம் – ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
-
போர்….சூளுரைத்த அயதுல்லா கமேனி; இஸ்ரேலுக்குள் சீறிப்பாய்ந்த ஹைபர் சோனிக் ஏவுகணை

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் தற்போது ஈரான் தனது முதல் ஹைபர் சோனிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுத பரிசோதனைகளுக்கு எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் இஸ்ரேல் விமானப்படை சமீபத்தில் ஈரானுக்குள் புகுந்து ஈரானிய அணு ஆய்வகங்களை தாக்கி அழித்தது. இதற்கு பதிலடியாக டெல் அவிவ் நகரை ஈரான் தாக்க, பதிலுக்கு தெஹ்ரானை இஸ்ரேல் தாக்க, இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்…
-
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

குடியேற்ற உரிமை போராட்டம் காரணமாக, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குடியேறிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் சட்ட விரோத குடியேறிகளைக் கடந்த வெள்ளியன்று ICE எனப்படும் Immigration and Customs Enforcement அதிகாரிகள் கைது செய்தனர். இதனைக் கண்டித்து லாஸ் ஏஞ்சலஸில் தொடர்ந்தும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில்,…