Tag: World

  • லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

    லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

    குடியேற்ற உரிமை போராட்டம் காரணமாக, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குடியேறிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் சட்ட விரோத குடியேறிகளைக் கடந்த வெள்ளியன்று ICE எனப்படும் Immigration and Customs Enforcement அதிகாரிகள் கைது செய்தனர். இதனைக் கண்டித்து லாஸ் ஏஞ்சலஸில் தொடர்ந்தும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில்,…

  • ஶ்ரீலங்கன் விமானம் அவசர தரையிறக்கம்

    ஶ்ரீலங்கன் விமானம் அவசர தரையிறக்கம்

    நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தைப் பரிசோதித்த பின்னர், குறைபாட்டைச் சரிசெய்ய சில மணி நேரம் ஆகும் எனத் தெரிவித்ததால், பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்கவைக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க அனுமதிக்க மறுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர், இலங்கைத் தூதரின்…

  • 299 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை; அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை

    299 குழந்தைகள்  பாலியல் வன்கொடுமை; அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை

    20 ஆண்டுகளுக்கு மேலாக 299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கான பிரான்ஸ் நீதிமன்றம், 74 வயதான முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் 200 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புதிய விசாரணை கடந்த…

  • ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து ; அதிர்ச்சியை ஏற்படுத்திய நாடு

    ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து ; அதிர்ச்சியை ஏற்படுத்திய நாடு

    குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர். குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். குவைத தலைவர் , 2023 டிசம்பரில் அதிகாரத்திற்குவந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு, சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார்.…

  • ஜோ பைடனுக்கு புற்றுநோய்

    ஜோ பைடனுக்கு புற்றுநோய்

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிக்கு தற்போது 82 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • மீண்டும் மிரட்டும் கொரோனா; அச்சத்தில் உலக நாடுகள்

    மீண்டும் மிரட்டும் கொரோனா; அச்சத்தில் உலக நாடுகள்

    சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மே 3ம் திகதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  

  • உலகின் உச்சியில் ஒளிர்ந்த ஒரு கொடி-அமெரிக்கா புர்ஜ் கலிபாவில்!

    உலகின் உச்சியில் ஒளிர்ந்த ஒரு கொடி-அமெரிக்கா புர்ஜ் கலிபாவில்!

    உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, துபாயில் அமைந்துள்ளது. சமீபத்தில், இது ஒரு முக்கிய நிகழ்வின் நேரடி காட்சிக்குத் தளமாக அமைந்தது.இந்த அசத்தலான கட்டிடத்தில் அமெரிக்கக் கொடி ஒளிபரப்பானது என்பது, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். புர்ஜ் கலிபா – உலக அதிசயம் புர்ஜ் கலிபா, 828 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான கட்டிடம் ஆகும். இது துபாயின் அடையாளமாக மட்டுமல்லாமல், கட்டிடக் கலைவல்லமையின் உச்சமாகவும் பார்க்கப்படுகிறது.…

  • இணைய கண்காணிப்பு சர்ச்சை-கூகுளுக்கு பெரும் அபராதம்!

    இணைய கண்காணிப்பு சர்ச்சை-கூகுளுக்கு பெரும் அபராதம்!

    டெக்னாலஜி உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது,புகழ்பெற்ற தேடல் இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான கூகுள் (Google) தற்போது பெரிய தண்டனையை சந்தித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கூகிளுக்கு எதிராக பல வழக்குகளை தொடர்ந்தது. இந்த வழக்குகள் பெரும்பாலும் பயனர் தனியுரிமை மீறல் மற்றும் போட்டி சட்ட மீறல்களை குறித்தவையாகும். 2020 ஆம் ஆண்டு, டெக்சாஸ், அமெரிக்கா மற்றும் பல மாநிலங்கள் கூகிள் மீது இணைய தேடல் மற்றும் விளம்பர சேவைகளில் தனித்துவமான நிலையை…

  • புதிய பாப்பரசரானார் அமெரிக்காவின் ரொபர்ட் பிரேிவோஸ்ட்

    புதிய பாப்பரசரானார் அமெரிக்காவின் ரொபர்ட் பிரேிவோஸ்ட்

    வத்திகானில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை உலக கத்தீலிக்க மக்களின் புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரேிவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவருக்கு பாப்பரசர் லியோ என்று பெயரிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 69 வயதான பாப்பரசர் லியோ, அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாப்பரசராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்

  • மாட்டுச் சாணம் ஏற்றுமதி – காரணமும் பயன்பாடும்!

    மாட்டுச் சாணம் ஏற்றுமதி – காரணமும் பயன்பாடும்!

    மாட்டுச் சாணம் என்பது இந்தியாவின் பாரம்பரிய கிராமப்புறங்களில் எப்போதும் பசுமை வேளாண்மை மற்றும் எரிபொருள் தேவைகளுக்குப் பயன்பட்ட ஒரு இயற்கை வளமாகும். ஆனால் இன்றைய உலகம், குறிப்பாக சில அரபு நாடுகள், இந்த இயற்கை வளத்திற்கு புதிய தேவையை உருவாக்கியுள்ளன.சாண உரமாக உருவாக்கப்படும் இந்திய மாட்டுச் சாணம், இப்போது வெளிநாடுகளான மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய பகுதிகளுக்கு ஏற்றுமதி ஆகி வருகிறது. ஏற்றுமதிக்கான முக்கிய காரணங்கள் மண்ணின் பசுமை மீட்டல் அரபு நாடுகள் பெரும்பாலும் பாலைவன பகுதிகளைக்…