Tag: World

  • நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்

    நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்

    சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட இந்த படத்தை அவர் பகிர்ந்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார். இந்நிலையில் போப்…

  • வீடியோ கேம் உபகரணங்கள் கூட போர் ஆயுதமா? – இங்கிலாந்தின் தடை மற்றும் அதன் பின்னணி

    வீடியோ கேம் உபகரணங்கள் கூட போர் ஆயுதமா? – இங்கிலாந்தின் தடை மற்றும் அதன் பின்னணி

    உலகம் இன்று மாறிவிட்டது. வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் சாதனங்களே இன்று போருக்கான ஆயுதங்களாக மாறுகின்றன. அதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு தான் இங்கிலாந்து அரசு மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கை – ரஷியாவுக்கு வீடியோ கேம் உபகரணங்கள், ஜாய் ஸ்டிக், மற்றும் ஹை-எண்ட் கேமிங் சாதனங்கள் ஏற்றுமதி செய்ய தடை. போர் மட்டும் இல்லை – தொழில்நுட்பத்தின் மோதலும் ரஷியா – உக்ரைன் போர் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருகின்றது. இதில் ரஷியா, பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி…

  • கடலில் விமானம் விழுந்து ஐந்து பொலிஸார் பலி

    கடலில் விமானம் விழுந்து ஐந்து பொலிஸார் பலி

    தாய்லாந்தில் விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துநொருங்கியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஹ_வா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியுள்ளது. ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிருக்காக போராடுகின்றார் என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைக்கிங் டிஎச்சி – 6 டுவின் ஓட்டர் விமானம் ஹ_வா ஹின் விமானநிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளாகியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலையை அவதானிப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விமானம் புறப்பட்டு ஒரு நிமிடத்தின் பி;ன்னர் கட்டுப்பாட்டை இழந்தது…

  • தங்கத்தின் விலை வரலாறு காணாதளவு அதிகரிப்பு

    தங்கத்தின் விலை வரலாறு காணாதளவு அதிகரிப்பு

    உலகளாவிய ரீதியில் நிலவும் வர்த்தக குழப்பங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (22) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,500 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், இன்றையதினம் ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 255,000 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 277,000 ரூபாவாகும். நேற்று திங்கட்கிழமை (21) ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 246,600 ரூபாவாகும்.…

  • பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்

    பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார் 88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் நித்திய இளைப்பாறியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார். நேற்று (20) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை…

  • பெருநாட்டில்-தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் வழிப்பறி!

    பெருநாட்டில்-தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் வழிப்பறி!

    அமெரிக்காவின் பெருநாட்டில் (அமெரிக்கா) வழிப்பறி மற்றும் கொலை குற்றங்கள் தொடர்பாக சமீபத்தில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஓஹியோ மாகாணத்தில், ஒரு மளிகைக் கடையில் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட கருப்பின கர்ப்பிணி, காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இருவர், கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் எனத் தெரியவந்துள்ளனர். அவர்கள் மீது 2023ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த இருவரும்…

  • சீனாவை தவிர பிற நாடுகளுக்கு வரி நிறுத்தம்

    சீனாவை தவிர பிற நாடுகளுக்கு வரி நிறுத்தம்

    உலகளாவிய சந்தை சரிவை எதிர்கொண்ட நிலையில் பெரும்பாலான நாடுகள் மீதான தனது வரிகளை 90 நாட்களுக்கு திடீரென பின்வாங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நிறுத்தப்படவில்லை. அந்த வரிகள் மேலும் 125% உயர்த்தப்பட்டுள்ளதை டிரம் அறிவித்தார். இதற்கிடையில், எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது முன்னர் அறிவிக்கப்பட்ட வரிக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிற்கு எதிரான அதன் பழிவாங்கும் வரிகளைத் தொடர ஐரோப்பிய ஒன்றியம் முன்னதாக ஒப்புக்கொண்டது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அனைத்து…

  • எங்களுக்கும் வரியா? ட்ரம்ப் உத்தரவால் பென்குவின்கள் அதிர்ச்சி

    எங்களுக்கும் வரியா? ட்ரம்ப் உத்தரவால் பென்குவின்கள்  அதிர்ச்சி

    அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகள் அமெரிக்காவை சுரண்டுவதாக குற்றம் சாட்டினார். தங்கள் நாட்டு பொருட்களை அமெரிக்காவில் குறைந்த வரிவிதிப்பில் ஏற்றுமதி செய்யும் அவர்கள் அமெரிக்க பொருட்களுக்கு தங்கள் நாட்டில் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டிய அவர், பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். அதன்படி நேற்று அவர் ஒவ்வொரு நாடும் அமெரிக்காவில் வணிகம் செய்ய எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்ற பட்டியலை வெளியிட்டார். அதில் ஆஸ்திரேலியாவின் எல்லைக்குள் அடங்கும் ஹெர்ட்…

  • மியன்மார் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

    மியன்மார் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

    மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இராணுவ ஆட்சியால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே நகருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு…

  • மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அல்றி ஓடிய மக்கள்

    மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அல்றி ஓடிய மக்கள்

    மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பாங்காக் நகரில் பல அடுக்குமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக நில அதிர்வு பதிவு செய்யப்பட்டது. மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.…