-
யாழ்ப்பாணம் பண்ணை கடலில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நான்கு பேர் வாவியில் குளிக்கச் சென்று சிக்கியதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய இருவர். உள்ளூர்வாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நீரில் மூழ்கியவர்களை மீட்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர்களில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார்…
-
யாழில் ஓட ஓட இளைஞன் வெட்டிக்கொலை; சிறையில் போட்ட திட்டம்; ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வானில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்துக்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. நீண்ட…
-
முத்தையன்கட்டு இளைஞன் உயிரிழப்பு; நீதியான விசாரணை இடம்பெறும்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தப்பி ஓடிய இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் 7 இளைஞர்கள்…
-
திருகோணமலையில் குழு மோதலில் இளைஞன் கொலை

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டு விட்டு அங்கிருந்து வெளியேறிய வேளை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, மடத்தடி – கிருஷ்ணர் ஒழுங்கையைச் சேர்ந்த டி.எச். வினோத் (வயது 33) என்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விருந்து நடைபெற்ற ஹோட்டலில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.…
-
இளைஞனை உதைத்த டீச்சர் அம்மாவை கைது செய்ய உத்தரவு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் ‘டீச்சர் அம்மா’ என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹயேஷிகா பெர்னாண்டோ இளைஞனை உதைத்துள்ள நிலையில், இளைஞனின் விதை பகுதியினை பாதித்துள்ளதுடன், சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்திற்குப் பிறகு, ஹயேஷிகா பெர்னாண்டோ அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரது கணவர் மற்றும் ஹயேஷிகா பெர்னாண்டோவின் முகாமையாளர் இருவரும்…
-
யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் (08) உயிரிழந்தார். மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக விவசாய காணியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் இருந்த வேளை மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கை சேர்ந்த 39 வயதுடைய குணரட்ணம் குமரன் என்பவராவார். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை…
-
பாலத்தில் இருந்து விழுந்தவர் பரிதாப உயிரிழப்பு

கொடகவெல, தொம்பகொல, எல்ல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த பாதுகாப்பற்ற பாலத்தில் இருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று (13) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் , மல்வத்தை கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த திருமணமான 27 வயதுடைய நதிக நுவன் திலகரத்ன என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் கொடகவெலயில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நேற்று முன் தினம்(12) இரவு சந்தைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்…
-
இளைஞர் ஒருவரின் நேர்மையான செயல்

பிபிலை பகுதியைச் சேர்ந்த இளைஞனின் பணப்பையை கண்டெடுத்த தோப்பூர் நபர் அதை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அனஸ் நிஜாமுதீன் என்பவர் கிண்ணியாவிற்கு செல்லும் போது வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை கடந்த 19 ஆம் திகதி கண்டெடுத்திருந்தார். அந்த பணப் பையில் 19,560 ரூபாய் பணமும் முக்கிய ஆவணங்களும் காணப்பட்டிருந்தன. இதில் அவரை தொடர்பு கொள்வதற்கான எதுவித தொலைபேசி இலக்கங்களும் இருக்கவில்லை. அப்பையில் அவரது ஆவணங்கள் இருந்தமையால் அதனை ஆதாரமாக வைத்து பணப்பையை கண்டெடுத்த…